games

img

டி20 போட்டிகளில் உலக சாதனை படைத்த ரோகித் சர்மா!  

டி20 போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.  

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ரோஸ் பவுலில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

கொரோனா காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோகித் சர்மா, நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணியை வழிநடத்தினார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் உலக சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக 13 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.  

மேலும், இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு அவர் தலைமையிலான இந்திய அணி ஒரு 50 ஓவர் மற்றும் டி20 போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

;