பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறை யை கடைபிடிக்கும் ஆப்கானிஸ்தா னின் தலிபான் அரசு, கடந்த டிசம்பர் மாதம் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கும், தொண்டு நிறு வனங்களில் பெண்கள் பணி யாற்றுவதற்கும் பெண்களுக்கு தடை விதித்தது. மேலும் பெண்கள் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற் பதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தன. இந்த விவகாரம் உலகம் முழுவதும் கடும் கண்டனங்களாக கிளம்பிய நிலை யில், வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆஸ்திரேலியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொட ரில் விளையாட உள்ளது. இதற்கான கால அட்டவணையும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில், ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த அதிரடி முடிவிற்கு உலகம் முழு வதும் பல்வேறு தரப்பினர் பாராட்டுக் களை தெரிவித்தனர்.
அரசு ஆதரவுடன் பெண்கள் முன்னேற்றத்திற்கு களமிறங்கும் ஆஸ்திரேலிய வாரியம்
ஆப்கானிஸ்தானில் ஆடவர் மற்றும் மகளிர் விளையாட்டுகளின் முன்னேற்றத்துக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பல்வேறு உதவிகளுடன் ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து அந்நாட்டு பெண்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கும் வாரியம் பாடுபடும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகும் முடிவுக்கு ஆதரவு அளித்த ஆஸ்திரேலிய அரசுக்கு நன்றி என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.