இன்னும் 16 நாட்களில் 22-வது சீசன் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர் கள் மற்றும் போட்டியை காண, தங்களது நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் கத்தார் செல்ல தயாராக உள்ளனர் ரசிகர்கள். உலகக்கோப்பை காண கத்தார் நாடு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மிக முக்கியமானது என்றாலும், அதை விட ஹய்யா என்ற அடையாள அட்டை மிக முக்கியமானது ஆகும். இந்த அட்டை கால்பந்து தொடருக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு அடையாள அட்டை ஆகும்.
ஹய்யாவின் சிறப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்
1.ஹய்யா கார்டு என்பது கால்பந்து காண வரும் வெளிநாட்டவரின் ஒரு முக்கிய அடையாள அட்டை ஆகும்.அதாவது கால்பந்து ரசிகர் என்றொருவரின் ஐடியின் ஒரு வடிவமாகும்.
2.கத்தார் நாட்டில் நவம்பர் 1 முதல் டிசம்பர் 23 வரை நாட்டிற்குள் நுழைய வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஹய்யா கார்டு கட்டாயம்.
3.ஹய்யா கார்டு வைத்து இருப்பவர்கள் மட்டுமே கத்தார் நாட்டின் அனைத்து பகுதிக்கும் செல்ல முடியும்.
4.ஹய்யா கார்டை பெற போட்டி டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஆன்லைன் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
5.ஹய்யா கார்டு வைத்திருப்பவர்கள் 23 ஜனவரி 2023 வரை கத்தாரில் தாராளமாக தங்கலாம்.
இதில் கவனம் தேவை
உலகளாவிய தொடரை நடத்தினாலும் வெளிநாட்டு ரசிகர்களுக்காக கத்தார் அரசு தனது இறையாண்மை விதிகளில் இருந்து உலகக்கோப்பைக்காக எந்த கட்டுப்பாட்டுத் தளர்வுகளையும் அறிவிக்கவில்லை. இது வெளிநாட்டு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் செல்லும் வெளிநாட்டவர்கள் அடையாள அட்டைகள், ஆல்கஹால், நிகோடின், ஓரினச்சேர்க்கை என பல்வேறு கட்டுப்பாடுகளை புரிந்து கொள்வது மிக அவசியமானது ஆகும். புரிதல் இல்லாமல் விதிகளை மீறினால் கடும் தண்டனைக்கு உட்பட வேண்டியிருக்கும் என கத்தார் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.