games

img

சமீபத்திய வெளிநாட்டு தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் - புஜாரா

சமீபகாலமாக வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிறது 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. 

இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது சிராஜ், தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி எனத் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியில் ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அணியின் சீனியர் வீரர் புஜாரா கூறுகையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று முதல் பயிற்சியைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் எங்களது பலம். அயலக மண்ணில் நாங்கள் கிரிக்கெட் விளையாடியபோது அவர்களது அபாரமான திறனைப் பந்து வீச்சாளர்கள் வெளிக் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்களை அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 

தென் ஆப்பிரிக்க நாட்டில் நிலவும் சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களைத் தகவமைத்துக் கொண்டு இந்திய பவுலர்கள் பந்து வீசி ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான வல்லமை அவர்களிடம் உள்ளது என புஜாரா தெரிவித்துள்ளார்.  

 

;