games

img

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர்

டெஸ்ட், ஒருநாள் என இரண்டு விதமான தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.  இந்நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் புதனன்று தொடங்குகிறது. டெஸ்ட் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி இந்திய அணியை வெறுங்கையோடு சொந்த நாட்டுக்கு அனுப்ப தென் ஆப்பிரிக்கா அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீதே குறியோடு களமிறங்குவதால் ஒருநாள் தொடர் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடம் : போலந்து பார்க், பார்ல், நேரம் : மதியம் 2 மணி (இந்திய நேரம்) 

;