games

img

2021 ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்: அஸ்வின் தேர்வு  

2021 ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஆர். அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

2021 ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த ஆர்.அஸ்வின் மீண்டும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இவர் 2021ல் 8 போட்டிகளில் 16.23 சராசரியில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில் ஒரு சதத்துடன் 28.08 சராசரியில் 337 ரன்கள் எடுத்தார்.  

இந்த நிலையில் 2021 ஐசிசி சிறந்த டெஸ்ட் விரருக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை திறமையை சிறந்த அளவில் வெளிப்படுத்திய வீரர்கள் ஐசிசியின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவார்கள். கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். ஜனவரி 17 முதல் 24 வரை ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.  

அந்த வகையில் ஆடவர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஆர். அஸ்வின், நியூசிலாந்தைச்  சேர்ந்த கைல் ஜேமிசன், இலங்கையைச் சேர்ந்த திமுத் கருணாரத்னே, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.