games

img

உலகக் கோப்பை கால்பந்து 2022...இன்னும் 23 நாட்கள்

கால்பந்து உலகக்கோப்பை என்றால் இத்தாலிக்கு தனி மவுசு உள்ளது. காரணம் அதிரடி ஆட்டம், புத்திசாலித்தனமான, தெளிவான ஆட்ட முறை என உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் இத்தாலி அணி, கடந்த சீசனை போலவே நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை.  நான்குமுறை உலகக் கோப்பையை முத்தமிட்ட இத்தாலி அணி தொடர்ந்து 2-வது முறையாக உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு தகுதிபெறாமல் வேடிக்கை  பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. 21-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் (2018 - ரஷ்யா) தகுதி பெற இயலாமல் போன இத்தாலி, 22-வது சீசனி லும் தகுதி சுற்றில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த சீசனில் (2018) பாடம் கற்றுள்ள இத்தாலி அணி இம்முறை தகுதி சுற்றில் வெற்றிபெற்று எளிதாக உல கக்கோப்பைக்கான  இறுதிப்பட்டியலில் இடம் பிடித்துவிடும் என இத்தாலி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கால்பந்து உலகமே எதிர்பார்த்தது. ஆனால் எதிர் பார்ப்புகள் அனைத்தும் கானல் நீரைப் போன்று காணாமல் போனது.  இத்தாலியின் பால்மிரோவில் நடை பெற்ற கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் இத்தாலி அணி, கால்பந்து உலகின் கத்துக் குட்டி அணியான வடக்கு மாசிடோனியா வை எதிர்கொண்டது. வடக்கு மாசிடோனி யாவை ஒர் அணியாக மதிக்காமல் தொடக் கத்தில் அசால்ட்டாக விளையாடியது இத்தாலி. ஆனால் நாம் பலமான அணி யுடன் விளையாடுகிறோம் என துடிப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரே ஒரு கோல் வித்தியாசத்தில் (1-0) இத்தாலியை உதைத்து தள்ளியது வடக்கு மாசிடோ னியா. இதனால் கத்தார் உலகக்கோப்பை தொடருக்கு இத்தாலி தகுதி பெறாமல் போனது. 

2018-ஆம் ஆண்டை போலவே மீண்டும் கண்ணீர் கடலில் மிதந்தது இத்தாலி. சொந்த நாட்டில் எப்பொழுதும் தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் இத்தாலி சொந்த மண்ணில் முக்கியமான ஆட்டங் களில் தோற்றதில்லை என்பதே வரலாறு. 1999-ஆம் ஆண்டு இத்தாலியின் நப்பிள்ஸ் நகரில் நடைபெற்ற டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி தோற்றிருந்தது. அந்த ஆட்டத்தில் கற்ற  பாடத்தால் 2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று அசத்தியது. 2010, 2014 உலகக்கோப்பைகளில் இத்தாலிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இரண்டு தொடர்களிலும் குரூப் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தது. தொட ர்ந்து 2018,2022 ஆண்டுகளில் தகுதி சுற்றோடு நடையை கட்டி இத்தாலி கால்பந்து உலகத்தின் நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இத்தனைக்கும் 2020-ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பி யன் வென்ற இத்தாலி அணி என்ன  காரணத்தினால் நடப்பு சீசன் உலகக்கோ ப்பைக்கு தகுதி பெறாமல் போனது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.