games

img

விளையாட்டு...

தேசிய ஆடவர் ஜூனியர் ஹாக்கி
மத்தியப் பிரதேசம் சாம்பியன்

ஒடிஷாவில் நடைபெற்று வந்த ஆடவர் தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் 13-வது சீசன் இறுதி ஆட்டத்தில்  சண்டிகர் - மத்தியப் பிரதேச அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சண்டிகர் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் மத்தியப் பிரதேச அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம்  வென்றது.

சீன தைபே பேட்மிண்டன்
பிரனோயும் வெளியேறினார்

ஆசியாவின் முக்கிய பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான சீன தைபே சர்வதேச பேட்மிண்டன் தொடரின் 40-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரனோய், ஹாங்காங் வீரர் அங்குஸை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அங்குஸ் 21-19, 21-8 என்ற செட் கணக்கில் பிரனோயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், சீன தைபே பேட்மிண்டன் தொடரில் விளையாடி வந்த ஒரே இந்தியரான பிரனோயும் வெளியேறினார்.

சேலத்தில் நடராஜன் பெயரில் கிரிக்கெட் அகாடமி திறப்பு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் பல லட்சம் செலவில் “நடராஜன் கிரிக்கெட் மைதானம்” என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.  4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங் கள், ஜிம், உணவகம், 100-க்கும்  மேற்பட்டோர் அமரக்கூடிய பெவிலி யன் என பல்வேறு சிறப்பு அம்சம் கொண்ட இந்த அகாடமியை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி வெள்ளியன்று திறந்து வைத்தார். கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கர வர்த்தி, விஜய் சங்கர், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, ஐபிஎல் சென்னை அணி யின் சிஇஓ விஸ்வநாதன், நடிகர்கள் யோகிபாபு, புகழ் மற்றும் டிஎன்பிஎல் தொடரின் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். 

டிஎன்பிஎல் 2023
இன்றைய ஆட்டங்கள்
திருநெல்வேலி - சென்னை
நேரம் : மதியம் 3:15 மணி
மதுரை - சேலம்
நேரம் : இரவு 7:15 மணி
இரண்டு ஆட்டங்களும் சேலம் எஸ்சிஎப் மைதானத்தில்... 

எஸ்சிஎப் மைதானம் செல்வது எப்படி?

டிஎன்பிஎல் ஆட்டம் நடைபெறும் சேலம் எஸ்சிஎப் மைதானம் சேலம் - வாழப்பாடி சாலையில் வாழப்பாடி அருகே உள்ள காட்டுவேப்பிலைப்பட்டியில் உள்ள சேர்வராயன் மலைச்சாரலில் அமைந்துள்ளது. வாழப்பாடி, ஆத்தூர், சேலம் ஆகிய வழிகளில்  எஸ்சிஎப் மைதானத்திற்கு செல்லலாம். சேலத்தில் இருந்து பேருந்தில் செல்பவர்கள் வாழப்பாடி நோக்கி செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

உலகக்கோப்பை தகுதி சுற்று (கிரிக்கெட்)

இன்றைய ஆட்டங்கள்

ஜிம்பாப்வே - மேற்கு இந்தியத் தீவுகள்
இடம் : ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே

நெதர்லாந்து - நேபாளம்
இடம் : தகாஷிங்கா கிளப், ஹராரே

இரண்டு ஆட்டங்களும் மதியம் 12:30 மணிக்கு தொடங்குகிறது...