games

img

6 கின்னஸ் சாதனை

சென்னையைச் சேர்ந்த மமதி வினோத் (8), பாலசரணிதா பாலாஜி (13),  ஜனனி சரவணா (14) ஆகிய மாணவிகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ரோலர் ஸ்கேடிங் என்று தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்தி 6 கின்னஸ் சாதனை பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். 
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 9 கின்னஸ் சாதனைகளை தகர்க்க 3 மாணவிகளும் முயற்சித்தனர். ஆனால் அவர்களால் 6 சாதனைகளை மட்டுமே முறியடிக்க முடிந்துள்ளது. இருப்பினும் வருங்காலத்தில் மீதமுள்ள சாதனைகளை தகர்ப்போம் என பதக்கம் வென்ற மாணவிகள் கம்பீரமாக கூறியுள்ளனர்.