games

img

நாளை நாக் அவுட் ஆட்டங்கள் தொடக்கம்

கிராஸ்-ஓவர் என்றால் என்ன?

ஹாக்கி தொடரில் கிராஸ்-ஓவர் என்பது லீக் சுற்றின் குரூப் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்கும் அணி கள் பங்கேற்கும் ஆட்டங்கள் ஆகும்.  இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் லீக் சுற்றின் குரூப் புள்ளிப்பட்டி யலில் முதலிடத்தை பிடித்த அணி களுடன் காலிறுதி ஆட்டத்தில் மோத முடியும். குரூப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடி யாக காலிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

15-வது சீசன் ஆடவர் உலகக் கோப்பை  ஹாக்கி இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் 2 நகரங்களில் (புவனேஸ்வர், ரூர்கேலா) நடைபெற்று வருகிறது.  மொத்தம் 16 அணிகள் பங்கேற்று ள்ள இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், லீக் ஆட்ட களைப்பை போக்க  சனிக்கிழமை யன்று வீரர்களுக்கு ஓய்வு  அளிக்கப் பட்டுள்ளது. மீண்டும் ஞாயிறன்று கிராஸ்-ஓவர் ஆட்டங்கள் துவங்குகிறது.

இனி நாக் அவுட்தான்

லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலை யில், இனி வரவிருக்கும் அனைத்து  ஆட்டங்களும் நாக் அவுட் ஆட்டங்கள் தான். வென்றால் அடுத்து சுற்று, தோற்றால் தரவரிசை சுற்று என்ற பதற்றமான நிலையில்தான் ஒவ்வொரு அணியும் விளையாட வேண்டும். ஞாயிறன்று கிராஸ்-ஓவர் ஆட்டங் கள் துவங்குகிறது. கிராஸ்-ஓவர் ஆட்டங் களில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெறலாம். இந்தியா தனது கிராஸ்-ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.