இளையோர் கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு?
இத்தாலி - உருகுவே இன்று பலப்பரீட்சை
அர்ஜெண்டினா நாட்டில் நடைபெற்று வரும் 20 வயதிற்குட் ்பட்டோர் பங்கேற்கும் இளையோர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் (23-வது சீசன்) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வெள்ளியன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே, இஸ்ரேலை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியும், சனி யன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி, தென் கொரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியும் இறுதிக்கு முன்னேறிய நிலையில், திங்களன்று அதிகாலை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இத்தாலி - உருகுவே அணிகள் கோப்பைக்கு மல்லுகட்டுகின்றன. முன்னதாக 3-வது இடத்திற்கான ஆட்டம் ஞாயிறன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இஸ்ரேல் - தென் கொரியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இத்தாலி - உருகுவே
நேரம் : ஜூன் 12 அதிகாலை 2:30 மணி (திங்களன்று)
இஸ்ரேல் - தென் கொரியா (3வது இடத்திற்கான ஆட்டம்)
நேரம் : ஜூன் 11 நள்ளிரவு 11:30 (ஞாயிறன்று)
இரண்டு ஆட்டங்களும் - எஸ்டடியோ மைதானம்
ஆசிய ஜூனியர் ஹாக்கி
இறுதியில் இந்திய மகளிர் அணி
8-வது சீசன் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்று வரு கிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட் டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. சனியன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டி க்கு தகுதி பெற்றது மட்டுமல்லாமல் நடப்பாண்டில் தென் அமெரிக்கா நாடான சிலியில் நடைபெற உள்ள மகளிர் ஜூனி யர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கும் இந்தியா தகுதிபெற்றது.
ஆக்ஸிஜன் சிலிண்டருடன் போட்டியை காண வந்த ஆஸி., ரசிகர்
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டம் நடை பெறும் லண்டன் ஓவல் மைதானத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் உட்காரக் கூட முடியாத நிலையிலும், ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் வீல் சேரில் வந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இருக்கும் நிலையிலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆட்டத்தை காண வந்த ரசிகருக்கு கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரெஞ்சு ஓபன் கோப்பை யாருக்கு?
ஜோகோவிச் - ரூத் இன்று பலப்பரீட்சை
களிமண் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் அல்காரஸை, 3-வது இடத்தில் உள்ள செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும், தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் ஜுவரேவை, 4-வது இடத்தில் உள்ள நார்வே வீரர் ரூத்தும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சும் - ரூத்தும் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
நோவக் ஜோகோவிச் (செர்பியா) - காஸ்பர் ரூத் (நார்வே)
நோவக் ஜோகோவிச் (செர்பியா) - காஸ்பர் ரூத் (நார்வே)
நேரம் : இந்திய நேரப்படி மாலை 6:30 மணி
சேனல் : சோனி டென், சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் டென்னிஸ் டிவி
வெற்றியாளருக்கு பரிசுத்தொகை : ரூ. 20 கோடி (23 லட்சம் யூரோ)
2-ஆம் இடம் : ரூ.10 கோடி (11 லட்சம் யூரோ)