games

img

விளையாட்டு...

இத்தாலி ஓபன் டென்னிஸ்   ரைபகினா சாம்பியன்

ஐரோப்பா கண்டத்தின் முக்கிய டென்னிஸ் தொடரான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையும், கஜகஸ்தான் நட்சத்திர முமான ரைபகினா, தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை கலினினாவை எதிர் கொண்டார்.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற செட் கணக்கில் ரைபகினா கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டின் 2-வது கேமில் கலினினாவுக்கு காயம் ஏற்பட போட்டியில் இருந்து வெளியேறி னார். அதிர்ஷ்ட வாய்ப்புடன் ரைபகினா 6-4, 1-0 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.

பாரீஸ்
பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம் களைகட்டிய பாரீஸ் நகரம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 92-வது சீசன் திங்களன்று (மே 22) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்கு கிறது. மொத்தம் ரூ.444 கோடி பரிசுத்தொகை கொண்ட இத்தொடர் களிமண் தரையில் நடைபெறுவதால் மற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களை விட சற்று சிறப்பானதாக இருக்கும். காரணம் களிமண் தரையில் விளையாடுவது சற்று சிரமமான காரியம் என்பதால் ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கும். களிமண் ரசிகர்கள் அதிர்ச்சி களிமண் தரையில் சிறப்பாக விளையாடும் நட்சத்திர வீரர் ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளார். பிரெஞ்சு ஓபனில் மட்டும் மொத்தம் 14 பட்டங்களை வென்றுள்ள ரபேல் நடாலின் ஆட்டத்தை காண தனி ரசிகர் பட்டாளம் பாரீஸ் நகருக்கு படையெடுத்து  வருவது வழக்கம். ஆனால் இம்முறை நடால் இல்லாத தால் களிமண் போட்டி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  ஐபிஎல் - 2023

இன்று விடுமுறை

16-வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டத்தால் ஏற்பட்ட களைப்பை போக்க திங்களன்று விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், தொடர்ந்து செவ்வாயன்று பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. பிளே ஆப் சுற்றின் தொடக்க நிகழ்வான குவாலிபையர் 1 ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள குஜராத் - சென்னை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிக்கு முன்னேறும். தோல்வி காணும் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். 

2... சென்னை... குவாலிபையர் 1, எலிமினேட்டர் ஆகிய ஆட்டங்கள் சென்னையில் நடைபெறுகிறது. குவாலிபையர் 2, இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. குவாலி பையர் 1 ஆட்டம் சொந்த மைதா னத்தில் நடைபெறுவதால் சென்னை அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் குவாலிபையர் 1, எலிமினேட்டர் ஆட்டங்களின் டிக்கெட் விற்பனை 3 நாட்களுக்கு முன்னரே நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை குவாலிபையர் 1 ஆட்டம்

சென்னை - குஜராத்
இடம் : சென்னை சேப்பாக்கம் மைதானம், தமிழ்நாடு
நேரம் : இரவு 7:30 மணி
(சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (தொலைக்காட்சி), ஜியோ சினிமா (ஒடிடி)

(மெட்ரோ இலவசம் : இந்த ஆட்டத்தை நேரில் காணச் செல்லும் (டிக்கெட் உடன்) ரசிகர்களுக்கு மெட்ரோ ரயில் இலவசம்)
 

 

;