games

img

விளையாட்டு ஒளிபரப்பிலும் ஆதிக்கம் செலுத்த அம்பானி திட்டம்

உலகின் முதன்மையான விளை யாட்டுத் தொடரான கத்தார் உலகக்கோப்பை  தொடரை உலக நாடுகளின் ஓடிடி நிறுவனங்கள் தனது ஒளிபரப்பை குறிப்பிட்ட அளவில்  வருமானமாக பார்த்தது. ஆனால் அம்பானியின் ரிலையன்ஸ் - ஜியோ சினிமா ஓடிடி நிறுவனம் இந்திய துணைக்கண்டத்தில் இலவசமாக ஒளிபரப்பி விளையாட்டு உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.  இந்நிலையில், ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு டிஜிட்டல் ஊடக ஒளிபரப்பு (ஓடிடி) செய்வதற்கான உரிமத்தை ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனம் ரூ. 23,758 கோடிக்கு வாங்கியது. டிஜிட்டல் ஒப்பந்தம் ரிலையன்ஸ் கையில் இருப்பதால் ஐபிஎல் தொடர் ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒளிபரப்பு செய்தால் ஐபிஎல் போட்டியை முதல்முறையாக இலவசமாக ஓடிடியில் ஒளிபரப்பு செய்த பெருமையை ஜியோ சினிமா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை ஹாக்கி - 2022

இன்றைய ஆட்டங்கள்
நியூசிலாந்து - சிலி
நேரம் : மதியம் 1:00 மணி
நெதர்லாந்து - மலேசியா
நேரம் : மதியம் 3:00 மணி
இரண்டு ஆட்டங்களும் ரூர்கேலாவில்...
பெல்ஜியம் - தென்கொரியா
நேரம் : மாலை 5:00 மணி 
ஜெர்மனி - ஜப்பான்
நேரம் : இரவு 7:00 மணி
இரண்டு ஆட்டங்களும் புவனேஸ்வரில்...

ஹாட் ஸ்டாரில் பார்க்கலாமா?

ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஒளி பரப்பு செய்வதற்கான உரிமையை ஸ்டார் நிறுவனம் ரூ. 23,575 கோடிக்கு வாங்கியுள்ளது. ஸ்டார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் நிறுவனத்தின் ஓடிடி பிரிவான ஹாட் ஸ்டார் டிஸ்னி நிறுவனத்தில் கணக்கு இருந்தால் நேரலையாக காணலாம். ஆனால் தற்போது டிஜிட்டல் பிரிவு ஒளிபரப்பு தனியாக ரிலையன்ஸ் கைக்கு சென்றுவிட்டது. இதனால் ஐபிஎல் தொடரின் ஹாட் ஸ்டார் டிஸ்னி நிறுவனத்தில் ஐபிஎல் தொடரை பார்க்கலாமா? இல்லை ஜியோ சினிமாவில்தான் பார்க்க வேண்டுமா? என்ற சந்தேக சிக்கல் உருவாகியுள்ளது.

40% பேர் கையில் ஹாட் ஸ்டார்

ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் குறிப்பிட்ட சந்தா கட்டணம் வசூலிக்கிறது. கட்டணம் வசூலித்தாலும் ஜியோ சினிமா போல் அல்லாமல் தடையில்லா விளையாட்டு நேரடி ஒளிபரப்பு, புதிய படங்கள், குடும்ப பெண்களின் தொலைக்காட்சி சீரியல், இளசுகளின் வெப் சீரிஸ், குழந்தைகளுக்கு கிட்ஸ் டிஸ்னி (தனி) என அனைத்து சிறப்பு அம்சங்களும் இருப்பதால் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் இணையவாசிகளில் 40% பேர் (தோராயமாக) ஹாட் ஸ்டார் கணக்கு வைத்துள்ளனர். புரியும்படி சொன்னால் நாட்டின் முன்னணி ஓடிடி நிறுவனமாக ஹாட் ஸ்டார் உள்ளது.   

கத்தார் உலகக்கோப்பையின் இலவசம் ஜியோ சினிமாவுக்கு சாதகத்தை ஏற்படுத்தியதா?

ஜியோ சினிமா ஓடிடியில் சந்தா என தனி கட்டணம் எதுவும் இல்லை என்றாலும், பழைய படங்கள், டப்பிங் படங்கள் தான். தனி வெப் சீரிஸ் எதுவும் கிடையாது. நேரடி ஒளிபரப்பில் அடிக்கடி தடங்கல் உள்ளது. கத்தார் உலகக்கோப்பையின் ஒளிபரப்பில் பல்வேறு பிரச்சனை ஏற்பட்டது. கத்தார் உலகக்கோப்பை முடிந்தவுடன் பெரும்பாலான இணையவாசிகள் ஜியோ சினிமாவை கண்டுகொள்ளவில்லை. என்னதான் இலவசமாக ஒளிபரப்பி தனக்கு ஒரு இடத்தை ஜியோ சினிமா பெற முயன்றாலும் தற்போது வரை இந்திய  ஓடிடியில் ஹாட் ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவைகள் முன்னணியில் உள்ளன. இதன் காரணமாகவே ஐபிஎல் தொடரிலும் இலவச திட்டத்தை கையில் எடுத்துள்ளது அம்பானியின் ஜியோ சினிமா.