ஐபிஎல் 2025 இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை உடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. லக்னோ அணி ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், அந்த அணிக்கு இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயம் தான். ஆனால் பெங்களூரு அணிக்கு இந்த ஆட்டம் மிக முக்கியமானது ஆகும். காரணம் இந்த ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு கூட முன்னேறும் வாய்ப்பு உருவாகலாம். லீக் நிறைவு பெற்றப் பின் மே 29ஆம் தேதி பிளே ஆப் சுற்றுகள் தொடங்குகின்றன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11:30 மணி அளவில் பிளே அட்டவணை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி லீக் ஆட்டம்
லக்னோ - பெங்களூரு
நேரம் : இரவு 7:30 மணி இடம் : எகானா மைதானம், லக்னோ, உ.பி., சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
பிரெஞ்சு ஓபன் 2025 நவர்ரோ அதிர்ச்சி தோல்வி
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 128ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஞாயிறன்று தொடங்கியது. திங்களன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை நவர்ரோ, தரவரிசையில் இல்லாத ஜெசிக்காவை எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெசிக்கா 6-0, 6-1 என்ற செட் கணக்கில் நவர்ரோவை புரட்டியெடுத்து 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். நவர்ரோ அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். அதே போல கஜகஸ்தானின் ரைபகினா, பல்கேரியாவின் விக்டோரியா ஆகியோரும் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர். போர்ஐஸ் கலக்கல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தரவரிசை யில் இல்லாத போர்ச்சுக்கல் நாட்டின் போர்ஐஸ், தரவரிசையில் இல்லாத பிரான்சின் கிரியானை எதிர்கொண்டார். 3 மணிநேரத் திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போர்ஐஸ் 3-6, 6-7 (3-7), 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல முன்னணி வீரர்களான ரூத் (நார்வே), தாமஸ் (செக்குடியரசு), பாப்ரின் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றனர்.