games

img

மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி : கனடாவை வீழ்த்திய இந்திய அணி

மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் 9-16 இடங்களுக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி கனடாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதி  நிமிடம் வரை இரு அணிகளும் 1-1 என்ற கோல்கணக்கில் சமனில் இருந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட்  நடைபெற்றது. இறுதியில் இந்திய மகளிர் அணி 3-2 என்ற கோல்  கணக்கில் கனடாவை வீழ்த்தியது. அடுத்ததாக 9-12 இடங்களுக்கான ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்திய அணி. புதனன்று (ஜூலை  13) இரவு 8 மணிக்கு ஆட்டம் (இந்திய நேரம்) நடைபெறவுள்ளது.