games

img

விளையாட்டு

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை மீண்டும் டாப் 10இல் இந்திய ஜோடி

ஞாயிறன்று சீன ஓபன் பேட் மிண்டன் தொடர் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து செவ்வா ய்க்கிழமை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் (BWF- Badminton World Federation) புதிய தரவரிசை பட்டி யலை வெளியிட்டது. இந்த தரவரிசை பட்டியலின் ஆடவர் இரட்டையர் பிரி வில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி ஜோடி 3 இடங்கள் முன்னேறி, 9ஆவது இடத் திற்கு முன்னேறியுள்ளது. சீன ஓபனில் அரையிறுதி வரை (தோல்வி) முன் னேறியதன் காரணமாக ராங்கி ரெட்டி - சிராக் செட்டிக்கு தரவரிசையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராங்கி - சிராக் ஜோடி மட்டுமே இருபாலர் ஒற்றையர், இருபாலர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 பிரிவுகளுக்கு சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் மட்டுமே டாப் 10இல் இந்திய கொடி உள்ளது.  மற்ற பிரிவுகளில் இந்தியர் கள் யாரும்  டாப் 10இல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய கோப்பையை வென்ற இங்கிலாந்து மகளிர் அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் நடை பெற்ற 14ஆவது சீசன் மகளிர்  ஐரோப்பிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. சனிக்கிழமை அன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  3-1 என்ற கோல் கணக்கில் இங்கி லாந்து அணி அபார வெற்றி பெற்று, தொடர்ந்து 2ஆவது முறையாக ஐரோப்பிய கோப்பையை கைப்பற்றி யது. இந்நிலையில், இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி ஐரோப்பிய கோப்பையுடன் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நள்ளிரவு) தாயகம் திரும்பியது. லண்டன் விமான நிலையத்தில் கோப்பையுடன் வந்த வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அதே போல அரசு சார்பிலும் தனியாக வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெண்டிங் வாய்ஸ்

ஹாரி புரூக் மோசமாக செயல்பட்டார்

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் பந்து வீச வந்தார். ஆனால் அவர்  மிகவும் அநாகரிகமாக செயல்பட்டார். அவர் ஆப் ஸ்பின் வீசுகிறேன் என்று மிக மோசமாக  செயல்பட்டார். அவருடைய பந்துவீச்சு நிச்சயமாக ஒரு வெட்கக்கேடான விஷயமாக இருந்தது. உங்களுக்கு வேகப்பந்து வீசத் தெரியும் தானே, பின் ஏன் பந்தை தூக்கி எறிந்தீர்கள். ஏதோ ஏழைகளின் டான் லாரன்ஸ் போல் அவருடைய பந்துவீச்சு இருந்தது. போட்டியை விரைவாக முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் பந்து வீசியது போல் தெரிந்தது

. - இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட்