games

img

விளையாட்டு...

கருப்பு பட்டையுடன் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

டெஸ்ட் தொடரின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) 2019 முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை இணைத்து  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது.  இந்த தொடரின் 2-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள  நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடை பெற்று வரும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் கோப்பைக்கு பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. புதனன்று நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தி கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

தாறுமாறாக திசை திரும்பிய பந்து தொடக்கத்தில் திணறிய ஆஸ்திரேலிய அணி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் வேகத்தை சமாளிக்க முடியாமல் மிக கடுமையாக திணறியது. காரணம் ஆடுகளம் உயிரோட்டமாக இருந்ததால் பந்து எப்படி எழும்புகிறது என்பதை ஆஸ்திரேலிய வீரர்களால் கணிக்க முடியவில்லை. இதன் விளைவு 4-வது ஓவரை வீசிய சிராஜ் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் காவஜா (0) தங்க முட்டையுடன் வெளியேறினார். முக்கியமாக முதல் 12 ஓவர்களில் ஷமி - சிராஜ் வேகக்கூட்டணியை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திக்கி திணறினர்.

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்  இந்தியா முதலிடம்

ஜெர்மனியின் சூல் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் சார்பில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே  ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண் கலம் என மொத்தம் 11 பதக்கங்களு டன் முதலிடத்தை பிடித்து அசத்தி யுள்ளது. 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங் களுடன் தென் கொரியா 2-வது இடத்தி லும், 3 தங்கம், 3 வெள்ளி  என மொத்தம் 6 பதக்கங்களுடன் அமெரிக்கா 3-வது இடத்திலும் உள்ளது.

இளையோர் உலகக்கோப்பை கால்பந்து 2023
அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

20 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கும் இளையோர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 23-வது சீசன் அர்ஜெண்டினாவில் நடை பெற்று வருகிறது.  தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழ னன்று அரையிறுதி ஆட்டங்கள்  தொடங்கு கின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே - இஸ்ரேல் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து வெள்ளியன்று அதிகாலை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி - தென் கொரியா பலப்பரீட்சைநடத்துகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள்

உருகுவே - இஸ்ரேல் 
நேரம் : இரவு 11:30 மணி
இத்தாலி - தென் கொரியா
நேரம் : ஜூன் 9 (வெள்ளியன்று அதிகாலை)
- 2:30 மணி 
இரண்டு ஆட்டங்களும் - எஸ்டடியோ மைதானம்

 

 

;