games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

ஆஸ்திரேலியாவில் மழைக்கு மத்தி யில் பரபரப்பாக நடைபெற்று வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் தற்போது “சூப்பர் 12” சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.  18-வது “சூப்பர் 12” சுற்று ஆட்டத் தில் கிரிக்கெட் உலகில் முக்கிய நட்சத்திர அணிகளான இந்தியா - தென் ஆப்பி ரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் உலகின் அதிபயங்கர ஆடு களமான பெர்த்தில் இரு அணிகளும் ஞாயிறன்று மல்லுக்கட்டுகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது ஆகும். காரணம் “குரூப் 2” பிரிவில் யார் முதலி டத்துடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வது என்று கடும் போட்டி உள்ளது. தற்போதைய நிலையில் “குரூப் 2” பிரிவில் இந்தியா 4 புள்ளிகளுடன் முத லிடத்திலும், தென் ஆப்பிரிக்க 3 புள்ளி களுடன் 2-வது இடத்திலும் உள்ளது. அரையிறுதி வாய்ப்பு மற்றும் புள்ளிபட்டியலில் முதலிட அந்தஸ்து என இரண்டு ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயம் என இரு அணிகளும் நன்கு உணர்ந்து களமிறங்குவதால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 
நேரம் : இரவு மாலை 4:30 மணி
இடம் : பெர்த் மைதானம்

மழை வருமா?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆட்டம் நடைபெறும் பெர்த் நகரத்தில் ஞாயிறன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அந்நாட்டு நேரப்படி மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள அறிகுறிகள் உள்ளது என்பதால் போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பிரிஸ்பேன் நகரத்தில் மழைக்கான சூழல் இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

வங்கதேசம் - ஜிம்பாப்வே
நேரம் : காலை 9:30 மணி
இடம் : பிரிஸ்பேன்
பாகிஸ்தான் - நெதர்லாந்து
நேரம் : மதியம் 12:30 மணி
இடம் : பெர்த்