நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 3 டி-20, 3 ஒருநாள் என 2 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் வெள்ளியன்று மதியம் 12 மணிக்கு (இந்திய நேரம்) வெல்லிங்டன் நகரில் நடைபெறுவதாக இருந்த நிலையில், கனமழை காரணமாக டாஸ் கூட போட முடியாமல் ஆட்டம் ரத்துசெய்யப் பட்டது. விடுமுறை நாளான ஞாயிறன்று 2-வது டி-20 ஆட்டம் நடைபெறுகிறது.