games

img

ஜடேஜாவும் சதம் : இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் தொடரில் சென்னை அணி கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய பின்பு இந்திய அணி யின் முன்னணி ஆல்ரவுண்டர் ஜடேஜா மனதளவில் பாதிக்கப்பட்டு பார்ம் பிரச்சனையை எதிர்கொண்டு இருப் பதாகவும் இனி அவரால் சிறிது காலம் கிரிக்கெட் விளை யாட முடியாது என பல்வேறு விமர்சனங்கள் கூறப் பட்டன. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜடேஜா பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் விமர்சனத்து க்கு தனது பேட் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற விருந்த இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி (5-வது) கொரோ னா பரவல் அச்சத்தால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், ஓராண்டு தாமதத்துக்கு பின் இங்கிலா ந்து நாட்டின் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்ஹாம் மைதானத்தில் வெள்ளியன்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் அதிரடி சதத் தின் (111 பந்துகளில் 146 ரன் கள்) உதவியால் சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந் தியா 7 விக்கெட்டுகள் இழப் பிற்கு 338 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 83 ரன்னிலும், முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் (0) களத்தில் இருந்த நிலை யில், 2-வது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜடேஜா சதமடித்து அசத்தினார். ஜடேஜா 104 ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 84.5 ஓவர்களில் 416 குவித்தது.

பேட்டிங்கில் பும்ரா  உலக சாதனை

பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டி யில் இங்கிலாந்து முன்னணி பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-வது ஓவரில் இந்திய அணியின் பந்துவீச்சாளரும், கேப்டனு மான பும்ரா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார். இது தவிர நோ பால், வைட் என  அந்த ஓவரில் நம்பமுடியாத அளவுக்கு 35 ரன்கள் கிடைத் தன டெஸ்ட் வரலாற்றில் எந்த ஒரு பந்துவீச்சாளரும் (பிராட்) 35 ரன்கள் கொடுத்தது கிடையாது. அதேபோல டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஒரு பேட்டரும் (பும்ரா) ஒரு ஓவரில் 29 ரன்கள் எடுத்தது கிடையாது என்பது குறிப்பி டத்தக்கது.

;