games

img

லக்னோ அணியின் வளர்ச்சிக்கு கம்பீர் காரணமல்ல

லக்னோ அணியின் வளர்ச்சிக்கு அந்த அணியின் ஆலோசகர் கம்பீர் தான் காரணம் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர் காரணமல்ல. தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவரின் (ஜிம்பாப்வே) நுணுக்கமான பயிற்சியின் மூலமாக தான் யாரும் எதிர்பாராத வகையில் ஐபிஎல் தொடரில் சிறப்பான அணியாக வளர்ந்துள்ளது. ஆன்டி பிளவர் இங்கிலாந்து அணிக்கு தனது அபார பயிற்சியின் மூலம் அந்த அணியை சூப்பர் பார்முக்கு கொண்டு வந்து பல்வேறு சாதனைகளை பெற காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் மட்டுமின்றி எவ்வித விளையாட்டாக இருந்தாலும் (தடகளம், சில உள்ளரங்க விளையாட்டுகளை தவிர) பயிற்சியாளர்களின் திறமையை பொறுத்தே ஒரு அணி மற்றும் ஒரு வீரர்களின் திறமை வெளிப்படும். ஐரோப்பா கண்டத்தில் கால்பந்து அணிகள் கோப்பையை வென்றால் முதலில் கூறப்படுவது இந்த பயிற்சியாளரின் சிறப்பான பங்களிப்பால்  தான் அந்த அணி கோப்பையை வென்றது என்பது தான். ஆனால் இந்தியாவில் எல்லாம் தலைகீழாக பேசப்படுகிறது. 

;