games

img

விளையாட்டு...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கானேபெய் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஒன்றான பிரெஞ்சு  ஓபன் தொடரின் 92-வது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடை பெற்று வருகிறது. மொத்தம் ரூ.444 கோடி பரிசுத் தொகைக்கு கொண்ட இந்த பிரெஞ்சு தொடர் களிமண் தரையில் நடை பெறுவதால் மற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களை விட சற்று சிறப்பான தாக இருக்கும் என்ற நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று  ஆட்டத்தில் அதிரடிக்கு பெயர் பெற்ற எஸ்டோனிய வீராங்கனை கானே பெய், அமெரிக்காவின் கீஸிடம் 1-6,  6-3, 1-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து  தொடரில் இருந்து வெளியேறினார். செக்குடியரசின் வெக்கிச், ரஷ்யா வின் கசட்கினா ஆகிய முன்னணி வீராங்கனைகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஒரே ஒரு மழையால் விளையாட்டிலும் போலிச் சான்றிதழ் பெற்ற “குஜராத் மாடல்”

ஒரு மணி நேர மழைக்கு தாங்காத “மோடி மைதானம்”

ரூ.800 கோடி செலவில் கட்டப் பட்ட குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள “மோடி மைதானம்” உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற சிறப்பு பெயரை கொண்டது. சிறப்பு பெயர் இருந்து என்ன பயன், ஒரு மணிநேர மழைக்கு கூட பெவிலியன் களின் கூரை தாங்கவில்லை. கிராமப் புற குடிசைகளை விட மிக மோசமான அளவில் மழை நீர் பெவிலியன் கான்கிரீட் பகுதியில் இருந்து வெளி யேறியது. இதனால் ரசிகர்கள் வேறு இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருந்தனர். ஏற்கெனவே போட்டி மழையால் பாதிக்கப்பட்டிருந்தது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பெவிலியனின் கூரை வழியாக மழை நீர் வெளியேறி யதால் ரசிகர்கள் கடுப்படைந்து வெளியே சென்றுவிட்டனர். என்ன சொல்வது இதுவும் “குஜராத் மாடல்” சாதனை என்றுதான் சமாளிக்க வேண்டும். 

விளையாட்டிலும் “குஜராத் மாடலின்” சோகம்

பொதுவாக மழை பெய்தால் கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பகுதியை மூடுவார்கள். காரணம் புல்தரைகளை விட களிமண்ணால் ஆன பிட்ச் பகுதி உணர கூடுதல் நேரம் ஆகும் என்பதால் ஆட்டம் பாதிக்கப்படாமல் இருக்க கடினமான தார்பாய்களுடன் மூடுவார்கள். தொழில்நுட்பங்கள் பல வந்துவிட்டதால் பிட்ச் மூடிவிட்டு மைதான ஊழியர்கள் பெவிலியன் வந்துவிடுவார்கள். ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் பகுதியில் தார்பாய் பறக்காமல் இருக்க வெயிட் பொருளாக கொட்டும் மழையில் சிறுவர்களை அமரவைத்தனர். சிறுவர்கள் அருகில் இருந்த சிறிய குடைகளை வைத்து பாதி மழையில் நனைந்து, பிட்ச் பகுதியை காத்தனர். பல்வேறு தொழில்நுட்பம் இருந்தும் கொட்டும் மழையில் சிறுவர்களை வெயிட் காப்பான்களாக அமரவைத்த பிரதமர் மோடியின் “குஜராத் மாடலுக்கு” மற்றொரு சர்ச்சை சான்றிதழ் கிடைத்துள்ளது.

என்னத்த சொல்ல... மழை நிற்க “ஜெய்ஸ்ரீ ராம்” சொன்ன குஜராத் ரசிகர்கள்

16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், அன்றைய தினம் மாலை தொடங்கிய மழை இரவு 11 மணி வரை பெய்தது. இதனால் சென்னை - குஜராத் அணிகள் மோதவிருந்த இறுதி ஆட்டம் திங்களன்று ஒத்திவைக்கப்பட்டது.  ஞாயிறன்று மாலை முதலே ஒவ்வொரு அரை மணிநேரம் மழை குறித்த அப்டேட்டை இந்திய, குஜராத், தனியார் வானிலை ஆய்வு மையங்கள், தமிழ்நாடு வேதர்மேன் பிரதீப் ஜான் ஆகியோர் அடிக்கடி வெளியிட்டனர். ஐபிஎல் நிர்வாகமும் இத்தனை மணிக்கு மழை நின்றால், இத்தனை ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டது. ஆனால் மழை நிற்கவில்லை. இரவு 11 மணி வரை தொடர்ந்ததால் திங்களன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  மழை பெய்த நேரத்தில், மழை நிற்க “ஜெய்ஸ்ரீ ராம்” என குஜராத் ரசிகர்கள் ஒருபக்கம் கூறினர். “ஜெய்ஸ்ரீ ராம்” சொன்னால் மழை கண்டிப்பாக நிற்கும் என அருகில் உள்ள தமிழின ரசிகர்களிடம் சொல்ல, அவர்கள் கேலி, கிண்டலுடன் வயிறு வலிக்கும்படி சிரித்து வேறு இடத்திற்கு நகர்ந்தனர்.  உண்மையாகவே மழை இப்பொழுது பெய்யும், இப்பொழுது நிற்கும் என அறிவிக்கும் அளவிற்கு வானிலை அறிவியல் வளர்ந்து விட்டாலும், குஜராத் மக்கள் இன்னும் “ஜெய்ஸ்ரீ ராம்” என்ற போலி நுண்ணறிவிலேயே காலத்தை கழித்து வருகின்றனர்.