பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இன்று முதல் தொடக்கம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 124ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஞாயிறன்று தொடங்குகிறது. களிமண் தரையில் நடைபெறும் இந்த தொடர் ஜூன் 8ஆம் தேதி வரை நடைபெறு கிறது. அனைத்து பிரிவு முன்னணி வீரர், வீராங்க னைகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளதால் அடுத்த 2 வார காலத்திற்கு விளையாட்டு சிறப்பு அதிரடி விருந்துடன் பரபரப்பாக நகரும் என்பது குறிப்பி டத்தக்கது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்திய அணி அறிவிப்பு
இந்தியா - இங்கிலாந்து அணிக் கெதிரான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை அன்று அறிவிக்கப் பட்டது. ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிய டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் சப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீரர்கள் விபரம் : சப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன் (தமிழ்நாடு), அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், ஜாஸ்ப்ரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் (தமிழ்நாடு), ஷர்துல் தாக்கூர், பிரஷித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ். இந்த வீரர்க ளின் பட்டியலில் இரண்டு பேர் தமிழ்நாட் டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இயிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்
மலேசியா மாஸ்டர்ஸ் பேட் மிண்டன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுஷி தனகாவை எதிர்கொண் டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன் னேறினார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எவ்வித தொடரிலும் பங்கேற்கா மல் இருந்த கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசி யா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதியபார்முடன் முன்னர் பயணித்த நட்சத்திர அந்தஸ்திலேயே மீண்டும் பய ணிக்க தொடங்கிவிட்டார். இத்தகைய சூழலில் ஞாயிறன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சீன வீரர் எஸ்.எப்.லீயை எதிர் கொள்கிறார் கிடாம்பி ஸ்ரீகாந்த்.