ஹாட் ஸ்டார் டிஸ்னி, சோனி லைவ் தளங்களில் பணம் செலுத்தி சந்தா வுடன் பார்ப்பதற்கு, இணையம் இருந்தால் முகநூலில் இலவசமாக பார்க்கலாம் என்ற முறையினால் தான் போலி ஆன்லைன் தளங் களுக்கு சமீபகாலமாக விளை யாட்டுத்துறையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
டிஎன்பிஎல்
இன்றைய ஆட்டம்
மதுரை - திருப்பூர்
இடம் : சேலம், நேரம் : இரவு 7:15
கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் தொலைக்காட்சி க்கு மாற்றாக ஓடிடி என்ற ஆன்லைன் தளங்களிலும் நேரலையாக ஒளி பரப்பப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டு தொடர்பான ஓடிடி தளங்களில் பிரபல மானது ஹாட் ஸ்டார் டிஸ்னி, சோனி லைவ் உள்ளிட்டவைகளாகும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு செய்யும் விளையாட்டுப் போட்டிகளை ஹாட் ஸ்டாரும், சோனி டென் ஒளிபரப்பு செய்யும் விளையாட்டுப் போட்டிகளை சோனி லைவ் தளமும் சந்தா உள்ள வர்களுக்கு ஒளிபரப்பு செய்கிறது. இதற்காக ஓடிடி தளங்கள் சிறப்பு சந்தா வசூல் செய்கிறது. அதாவது வரு டத்திற்கு ரூ.999 வசூல் (மாத சந்தா வும் உள்ளது) செய்து தான் ஒப்பந்தம் செய்துள்ள விளையாட்டுப் போட்டிகளை மட்டும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒளிபரப்பு செய்கிறது. திரைப்படம், வெப்சீரி யஸ் ஆர்வம் உள்ளவர்கள் போன்று விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் சந்தா பணம் செலுத்தி விளையாட்டு நிகழ்வுகளை காணு கின்றனர்.
இதில் முக்கியமான விஷ யம் என்னவென்றால் திரைப்படம், வெப்சீரியஸ் துறையை விட விளை யாட்டுத்துறை தான் அதிக பார்வை யாளர்களை கொண்டுள்ளது. இத னால் ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மூலம் சந்தா பணம், விளம்பரம் உள்ளிட்டவைகள் மூலம் நன்றாக கல்லா கட்டி வரும் ஓடிடி தளங்களின் வருமானத்தில் போலி ஆன்லைன் தளங்கள் மூலம் மிகப் பெரிய இடி ஒன்று விழுந்துள்ளது. ஹாட் ஸ்டார் டிஸ்னி, சோனி லைவ் உள்ளிட்ட தளங்களில் நேரலையாக வெளியாகும் ஆட்டங்கள் போலி ஆன்லைன் தளங்கள் முகநூலிலும் நேரலையாக வெளியாகி வருகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக் கணக்கான தளங்களில் நேரலையாக வெளியாகி வருவதால் நேரலையாக போட்டிகள் நடைபெறும் தினத்தில் விளையாட்டுப் பிரியர்கள் (ஓடிடி தள சந்தா இல்லாத) போலி ஆன் லைன் தளங்களில் முகாமிட்டுள்ள னர். குறிப்பாக ஒவ்வொரு போலி ஆன்லைன் தளங்களிலும் சுமார் 7 லட்சம் பேர் வரை பார்வையாளர் களாக உள்ளனர். ஓடிடி தளங்களின் புள்ளிவிவரத்தில் இது மிகவும் அதிகபட்ச பதிவாகும். போலி ஆன்லைன் தளங்களில் வெளியாகும் போட்டிகள் அனைத்தும் ஹாட் ஸ்டார் டிஸ்னி, சோனி லைவ் தளங்களில் ஒளிபரப்பாகும் நேரலை ஆட்டங்கள் தான். இது எப்படி நடக் கிறது என்று முறையாக கண்ட றிந்தால் தான் பதிவுபெற்ற ஓடிடி தளங்களின் வருமானம் மற்றும் பெயர் எப்பொழுதும் போல இருக் கும். இல்லையென்றால் ஹாட் ஸ்டார் டிஸ்னி, சோனி லைவ் ஒருவரு டத்திற்கு கூட தாங்காது. திவால் நிலைக்குச் செல்லும் வாய்ப்பு கூடிய விரைவில் உருவாகும்.
தென் ஆப்பிரிக்காவிலும் ஆதிக்கம் செலுத்தும் ஐபிஎல் உரிமையாளர்கள்
இந்தியாவில் ஐபிஎல் தொடரைப் போன்று தென் ஆப்பிரிக்காவில் சிஎஸ்ஏ (CSA - CRICKET OF SOUTH AFRICA) டி-20 லீக் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டுக்கான சீசன் பிப்ரவரியில் நிறைவு பெற்ற நிலையில், அடுத்த சீசனுக்கான (2023) ஏற்பாட்டில் மொத்தமுள்ள 6 அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.