games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா 2022

சூப்பர் 12 சுற்றின் 9-வது ஆட்டத்தில் “குரூப் 1”  பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து - அயர்லாந்து மோதின. புதனன்று மெல்போர்ன் நகரில்  நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து  அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் மிரட்டலான பந்துவீச்சை அசத்தலாக எதிர்கொண்டு  நிதானமாக ரன் குவித்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் மிக மோசமாக திணறியது. அதாவது 13.1 ஓவரில் முக்கியமான 5 விக்கெட்டுகளை (86 ரன்கள்) இழந்து தடுமாறி யது. மீண்டும் மழை குறுக்கிட ஆட்டத்தின் தன்மை  தலைகீழாக மாறியது. ஓவருக்கும் - ரன் குவித்த  விகிதத்திற்கும் போதுமான வித்தியாசம் இருந்த தால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல மிகவும் அசால்ட்டாக  நினைத்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கி லாந்து அணிக்கு, அயர்லாந்து அணி அதிர்ச்சி வைத்தி யம் அளித்துள்ளது. ஏற்கெனவே இந்திய துணைக் கண்டத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, அயர்லாந்திடம் மண்ணை கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது. (ஸ்கோர் : அயர்லாந்து 157/10 (19.2), இங்கிலாந்து 105/5 (14.3))

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் ஆட்டம் ரத்து

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருந்த “சூப்பர் 12” சுற்றின் 9-வது ஆட்டம் மழையால்  டாஸ் கூட போடமுடியாமல் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளி வழங்கப்பட்டுள்ளது.

2-வது வெற்றியை ருசிக்குமா இந்தியா? இன்று நெதர்லாந்து அணியுடன் மோதல்

“சூப்பர் 12” சுற்றின் “குரூப் 2” பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில்  பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் வியாழனன்று நடைபெறும் தனது 2-வது “சூப்பர் 12” சுற்று ஆட்டத்தில் கத்துக்குட்டி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்தியா - நெதர்லாந்து /  நேரம் : மதியம் 12:30 மணி / இடம் : சிட்னி

மற்ற இன்றைய ஆட்டங்கள்

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே
நேரம் : மாலை 4:30 மணி
இடம் : பெர்த்

தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம்
நேரம் : காலை 8:30 மணி
இடம் : சிட்னி

மழை வருமா?

வியாழனன்று நிலவரப்படி  இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் சிட்னி நகரில் 80% மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு ஆட்டம் நடைபெறும் பெர்த் நகரில் மழைக்கான சூழல் இல்லை