games

img

ஒரு சகாப்தத்தின் முடிவு விடைபெற்றார் ஜூலன் கோஸ்வாமி

லார்ட்ஸ், செப்.25-  இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையே சனிக்கிழமையன்று நடைபெற்ற 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியுடன் ‘‘சக்தா எக்ஸ்பிரஸ்” என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீராங் கனை ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என வென்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியுடன் விடைபெற்ற கோஸ்வாமி, பேட்டிங் செய்ய வந்தபோது, இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறம் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். இதேபோல், பவுலிங் செய்ய வரும்போது இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமிக்கு வர வேற்பு கொடுத்தனர். கோஸ்வாமி தனது கடைசி போட்டியில், 10 ஓவர்கள் வீசி 3 மெய்ட ன்களுடன் 2 விக்கெட்களை வீழ்த்தினார். போட்டிக்கு முன்னதாக பேசிய கோஸ்வாமி, “1997ல் ஈடன் கார்டனில் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி யில் எல்லைகளில் வரும் பந்து பொறுக்கும் சிறுமியாக மைதானத்தில் பணியாற்றினேன். அன்றைய தினம் நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என கனவுகண்டேன். அப்படித்தான் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. நிறைய முயற்சி செய்தேன். எனது நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வில் மிகப்பெரிய தருணம்.

உலக கோப்பை கனவு

நான் இரண்டு [50-ஓவர்] உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடினேன். அதில் ஒன்றையாவது வென்றிருந்தால், எனக்கும், இந்தியாவுக்கும், மகளிர் கிரிக்கெட்டிற்கும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அது  எனக்கு ஒரு வருத்தம். இந்தியா என்ற பெயர் எழுதப்பட்ட ஜெர்சியை அணிந்துகொள்வது தான் எப்போதும் அனுபவிக்கும் தருணம். அது என் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத  விஷயம்” என்று உருக்கமாக பேசினார்.

ஜூலன் கோஸ்வாமி யார்?

சக்தாஹா (சக்தா) மேற்கு வங்கத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய நகரம். இந்த நகரில் வளர்ந்து வரும் ஒரு பெண், கிரிக்கெட்  உலகில் உச்சத்தை அடைவது என்பது அவ்வ ளவு எளிதானது அல்ல. சக்தாஹா நகரின்  ஒரு எளிய வீட்டில் பிறந்து அதை சாத்தியப் படுத்தினார் ஜூலன். நடுத்தர வர்க்கத்திற்கும் கீழான எளிமையான குடும்பத்தைப் பின்னணி யாகக் கொண்ட ஜூலனின் வீட்டார் விளை யாட்டை விடப் பெண்களின் கல்வி மற்றும் திரு மணம் பற்றி அதிகம் சிந்திக்கும் இயல்பு கொண்டவர்கள். கம்யூனிசத்தை பின்பற்றி வந்த மேற்கு வங்கத்தில் பெரும்பாலும் கால்பந்து விளையாட்டே அதிகம் ரசிக்கப்படும். ஜூல னுக்கும் கால்பந்தே பிடித்தமான விளை யாட்டு. இதனால், 15 வயது வரை ஜூல னுக்கு கிரிக்கெட் பற்றிய பெரிய எண்ணம் கிடையாது. ஒரு தற்செயல் நிகழ்வு அவரை கிரிக்கெட் உலகை நோக்கி நகர வைத்தது. 

பந்து பொறுக்கும் சிறுமியாக

அந்த நிகழ்வு இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டனில் 1997-ம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி. 1997-ம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்தி ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஜூலன் எல்லைகளில் வரும் பந்து பொறுக்கும் சிறுமியாக மைதானத்தில் பணியாற்றினார். அன்றைய தினம், களத்தில் இருந்த மற்ற நாட்டுப் பெண் வீராங்கனைகளைப் பார்த்தவர், அடுத்த கணம் தானும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தார். தனது 15-வது வயதில் ஜூலன் கிரிக்கெட் பற்றிய கனவு கண்டாலும், அதை சாத்தியப்படுத்த அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். பொதுவாக இந்த 15 வயதில்தான் பலர் தொழில்முறை கிரிக்கெட் வீரருக்கான பயணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள்.

80 கி.மீ தூரம் கடந்து

மற்றவர்களைவிட ஜூலன் தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனையாக மாறச் செய்த உழைப்பு வியக்கத்தக்கது. பின்தங்கிய நகர மான சக்தாஹாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான எந்த வசதியும் கிடையாது. சக்தாஹாவில் இருந்து 80 கி.மீ தூரம் தள்ளி இருக்கும் கொல்கத்தாவில் மட்டுமே அந்நாளில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள முடியும். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் அதிகம் கவனிக்கப்படாத ஒரு விளையாட்டை நோக்கி  இந்த 80 கி.மீ. தூரத்தை தினமும் கடக்கத்  துணிந்தார் ஜூலன். அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் சாக்தாஹா - ஹவுரா ரயிலைப் பிடித்தால்தான் சரியான நேரத்துக்குப் பயிற்சி க்குச் செல்ல முடியும். கொல்கத்தாவில் அப்போது ஸ்வபன் சது என்ற பயிற்சியாளரே மிகப்பிரபலம். அவரிடமே ஜூலன் கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

வேகப்பந்து வீச்சாளராக...

கிரிக்கெட் வீராங்கனையாக உருவெடுக்க இரவு பகலாக உழைத்தார். ஜூலனின் கடின உழைப்புக்கு வெகுவிரைவாகவே பலன் கிடைக்கத் தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளராகப் பயிற்சியில் மின்னிய ஜூலன் முதலில் பெங்கால் அணியில் தேர்வு செய்யப்பட்டார். 

முதல் சர்வதேச போட்டி

நான்கு வருடக் கடின உழைப்பில், ஜூலன் சர்வதேச அரங்கிலும் அறிமுக மானார். 2002-ல் சென்னையில் நடந்த இங்கி லாந்துக்கு எதிரான போட்டியே அவரின் முதல் சர்வதேசப் போட்டி. இந்தப் போட்டி யின்போது அவரின் வயது 19 மட்டுமே. முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் அவர்தான் என்ப தற்கான விதையைப் போட்டார் ஜூலன். மகளிர் கிரிக்கெட் உலகில் அதிக வேகத்தில் பந்துவீசக்கூடிய ஸ்ட்ரைக் பவுலர்களில் ஒருவரான ஜூலன், இந்திய அணியின் சாதனை வெற்றிகள் பலவற்றில் முக்கியப் பங்கு கொண்டுள்ளார். மேலும் இந்திய மகளிர் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். ஆல்  ரவுண்டராக அறியப்பட்டாலும் ஒரு வேகப்பந்து வீச்சாளராகச் சிறந்த சாதனை களை வைத்துள்ளார்.

அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகள்

2007-ம் ஆண்டுக்கான ‘’சிறந்த வீராங்க னை’’ ஐசிசி விருதைப் பெற்றுள்ளார். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். கிரிக்கெட் சாதனைகளுக்காக அர்ஜுனா விருது (2010) மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை (2012) வழங்கி ஒன்றிய அரசு ஜூலன் கோஸ்வாமியை கௌரவித்துள்ளது. முன்னாள் சிறந்த வீராங்கனை டயானா எடுல்ஜிக்குப் பிறகு பத்மஸ்ரீ விருது பெற்ற நாட்டின் இரண்டாவது பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் ஆவார்.

‘சக்தா எக்ஸ்பிரஸ்’

ஜூலன் கோஸ்வாமி, ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்துடன் ஒப்பிடப்படுகிறார். அவரது வேகம் மணிக்கு 120 கி.மீ. பெண்கள்  கிரிக்கெட்டில் இது அதிகம். இதனால்தான் இவரை ‘சக்தா எக்ஸ்பிரஸ்’, ‘பெங்கால் எக்ஸ்பிரஸ்’ என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்கின்றனர்.  இவரது வாழ்க்கை பயணத்தை மைய மாக கொண்டு ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, கோஸ்வாமியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







 

;