உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர் - வீராங்கனைகள் டென்னிஸ் உலகின் அதிக பரிசுத்தொகை கொண்ட கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து நாட்டு டென்னிஸ் சம்மேளனம் தடை விதித்தது. இந்நிலையில், நடப்பாண்டு சீசனில் ரஷ்யா, பெலாரஸ் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்கலாம் என இங்கிலாந்து நாட்டு டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு செக்குடியரசைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையும், 2 முறை விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவருமான கிவிட்டோவா கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “நான் எப்போதும் போரை எதிர்க்கிறேன். உக்ரைனின் மக்கள், வீரர்கள் குறித்து நான் கூடுதல் கவலையடைந்துள்ளேன். இதனால் அவர்கள் (ரஷ்ய, பெலா ரஸ் போட்டியாளர்கள்) அனுமதிக்கப்படக் கூடாது என நான் கருதுகிறேன். ஓலிம்பிக் போட்டிகளுக்கும் அனுமதிக்கப்படக் கூடாது” எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் - 2023
ஒரு மைதானத்தில் கூட பந்துவீச்சு எடுபடவில்லை
16-வது சீசன் ஐபிஎல் தொடரில் தற்போது 5 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுவிட்டது. 5 லீக் ஆட்டங் கள் லக்னோ, அகமதாபாத், மொஹாலி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 5 மைதானங்களில் நடைபெற்றது. இதில் பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய தென் மாநில மைதானங்கள் மட்டுமே பேட்டிங், பந்துவீச்சு என சரிசம மாக எடுபட்டது. லக்னோ, அகமதாபாத், மொஹாலி மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. கிட்டத்தட்ட பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக ரன் மிஷின்களை பயன்படுத்தியிருக்கலாம் என்ற நிலையில் மைதானங்கள் மிகவும் மந்தமாக இருந்தது.
பராமரிப்பு இல்லை
பொதுவாக மைதானத்தில் பிட்ச் பராமரிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். பிட்ச் பகுதியை மருத்துவமனை யில் சிகிச்சை பெறும் நபர்களை போன்று தண்ணீர், வெப்பம் என சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப கவனிக்க வேண்டும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சென்னை, ஹைதரா பாத், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய 4 மைதானங்கள் மட்டுமே எப்பொழுதும் போல சரியான அளவில் பராமரிப்பு செய்யப்படுகிறது. மற்ற மைதானங்களில் பெயரளவிற்கு தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது போல ஊற்றி விடுகின்றனர். இதனால்தான் பிட்ச் பகுதி மந்தமாகவே இருக்கிறது. பிட்ச் பகுதி மந்தமாக இருந்தால் பந்துவீச்சு எடுபடாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் டிக்கெட் : தமிழ்நாட்டில் மட்டுமே டிக்கெட் விலை மிகவும் குறைவு
நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் 11 மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த 11 மைதானங்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான சென்னை மைதானத்தில் மட்டுமே டிக்கெட் விலை குறைவு. மற்ற மைதானங்களில் அடிப்படை விலையை குறைத்து கேலரிக்கு ஏற்ப டிக்கெட் விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளனர். சென்னை மைதானத்தில் கேலரிக்கு ஏற்ப கட்டணம் ரூ.5000-க்கு கீழ்தான் உள்ளது. ஆனால் மற்ற மாநில மைதானங்களில் கேலரிக்கு ஏற்ப கட்டணம் ரூ.35,000 வரை உள்ளது.
1. எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை (தமிழ்நாடு):
ரூ. 1,500 முதல் ரூ. 5,000 வரை
2. வான்கடே மைதானம், மும்பை (மகாராஷ்டிரா):
ரூ. 800 முதல் ரூ. 35,000 வரை
3. பிசிஏ மைதானம், மொஹாலி (பஞ்சாப்):
ரூ. 800 முதல் ரூ. 25,000 வரை
4. ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா (மேற்கு வங்கம்):
ரூ. 400 முதல் ரூ. 14,000 வரை
5. ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத் (தெலுங்கானா): ரூ. 400 முதல் ரூ. 18,000
6. எம்.சின்னசாமி மைதானம், பெங்களூரு (கர்நாடகா):
ரூ. 1,500 முதல் ரூ. 18,000
7. தில்லி அருண் ஜெட்லி மைதானம்: ரூ. 500 முதல்
ரூ. 15,000
8. சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
ரூ. 500 முதல் ரூ. 15,000 வரை
9. ஏக்நா மைதானம், லக்னோ உத்தரப்பிரதேசம்:
ரூ. 699 முதல் ரூ.18,000 வரை
இன்றைய ஆட்டம்
தில்லி - குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : தில்லி
சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா
(ஒரு சில போட்டிகள் மட்டுமே நடைபெறும் கவுகாத்தி, தர்மசாலா மைதானங்களின் தெளிவான டிக்கெட் விற்பனை
குறித்து தகவல் இல்லை)