games

img

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ரவி பிஷ்னோய்  

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் ரவி பிஷ்னோய் இடம் பிடித்துள்ளார்.  

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-மேற்கு இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 6 ஆம் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்திருந்தது. ரோகித் தலைமையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் இடம் பிடித்துள்ளார்.  

ராஜஸ்தானை சேர்ந்த 21 வயதான ரவி பிஷ்னோய் 2020 ஆம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார்.  ஐபிஎல் போட்டியின் மூலம் அடையாளம் காணப்பட்டிருக்கும் ரவி பிஷ்னோய், இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த நிலையில், எதிர்வரும் சீசனில் புதிதாக இணைந்திருக்கும் லக்னோ அணிக்காக விளையாட உள்ளார்.

அதனைதொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 

;