games

img

ஹர்திக் பாண்டியாவின் செயலால் வெடித்தது சர்ச்சை

நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டி அக மதாபாத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி டாஸ் வென்று 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது. 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வெறும் 12.1 ஓவர்களில் 66 எடுத்து சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி  168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆனால் இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செய லால் சர்ச்சை வெடித்துள்ளது. அவர் கேப்டன் என்ற அதிகாரத்தை தவறாக  பயன்படுத்தி உள்ளார். அது யாதெனில் டி-20 உலகில் 120 பந்துகளுக்கு 235 ரன் கள் (நியூசிலாந்து அணிக்கு நிர்ண யிக்கப்பட்ட இலக்கு) எடுப்பது கடின மான காரியம். அர்ஷதீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மவி, குல்தீப் யாதவ் என முதன்மையான பந்துவீச்சாளர்கள் இருந்தும் முதல் ஓவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீச காரணம் என்ன? கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டர். முதன்மையான பந்துவீச்சாளர்கள் சொதப்பினால் மட்டுமே ஆல்ரவுண்டரை களமிறக்க முடியும்.  முக்கியமாக ஆல்ரவுண்டர்கள் பகுதி நேரமாக அல்லது அவசர காலத்தில்தான் பந்து வீசுவார்கள். இக்கட்டான சூழ்நிலையில் எப்பொழு தாவது ஆல்ரவுண்டர்களை ஆரம்ப  பந்துவீச்சாளர்களாக பயன்படுத்து வார்கள். ஆனால் நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி டி-20 போட்டியில் இந்தியா மிக வலுவாக ரன் குவித்துள்ளது. ஏறக்குறைய 60% வெற்றி கையில் உள்ளது. அப்படி இருக்கையில் முதன்மையான பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கா மல், பேட்டிங்கும் (30 ரன்கள்) செய்து  கேப்டன் பொறுப்பை சாதகமாக வைத்து பந்துவீச்சிலும் ஹர்திக் பாண்டியா ஆதிக்கம் செலுத்தியது மிகவும் தவறானது. இந்திய பந்துவீச்சா ளர்களில் ஹர்திக் பாண்டியா மட்டுமே 4 ஓவர்கள் முழுமையாக வீசினார்.  வெற்றி பெறும் சூழலில் இளம் பந்துவீச்சாளர்களான அர்ஷதீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மவி ஆகி யோருக்கு வாய்ப்பு அளிக்க ஹர்திக் விரும்பவில்லை. கேப்டன் பதவியை வைத்து பேட்டிங், பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்துவது கேப்டன் பொறுப்புக்கு அழகல்ல.  இதனை தற்போதே இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடவடிக்கை எடுத்தால் நல்லது. இல்லையென்றால் இளம் வீரர்களுக்கு ஈகோ அதிகரிக்கும். மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;