games

img

கோலியின் சாதனையை முறியடித்த கேப்டன் பாபர் அசாம்!  

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புதிய சாதனையை படைத்துள்ளார்.  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, தொடர்களின் அடிப்படையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்திய டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  

இதையடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையை இவர் முறியடித்துள்ளார். தற்போது தரவரிசையில் பாபர் அசாம் 818 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் 794 ரேட்டிங் புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.  

விராட்கோலி இந்த ஆண்டு 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் மற்றும் தரவரிசையில் 21வது இடத்தில் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் 300 ரன்களை கூட கோலி கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக விராட்கோலி 17 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து சாதனையாக இருந்த நிலையில், தற்போது கேப்டனாக வெறும் 13 இன்னிங்ஸில் 100 ரன்கள் கடந்து பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

இதற்கிடையில் சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் 6வது இடத்தில் இருந்த இஷான் கிஷான், ஒரு இடத்தை பின்னுக்கு தள்ளி 7வது இடத்திலும், கே.எல்.ராகுல் 17வது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 19வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;