games

img

விளையாட்டு... ஐபிஎல் இன்னும் 2 நாட்கள்

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு வெண்கலம்

ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் டுரெஸ் நகரில் உலக பளுதூக்குதல் இளைஞர் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பரலி பெடப்ரேட் (15) மொத்தம் 267 கிலோ  (119 கிலோ + 148 கிலோ) எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். ஆர்மீனியாவின் செரியோஷா பர்செக்யான் 275 கிலோ (128 கிலோ+147 கிலோ) எடையை தூக்கி தங்கப்பதக்கமும், சவூதி அரேபியாவின் முகமது அல் மர்சூக் (270 கிலோ - 119 கிலோ+148 கிலோ) வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.

மியாமி ஓபன் டென்னிஸ்: ஒரே நாளில் 3 முக்கிய வீரர்கள் அவுட்

அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வரும் டென்னிஸ் உலகின் முக்கிய தொட ரான, மியாமி ஓபன் தொடரின் ஆடவர்  ஒற்றையர் பிரிவு 3-ஆம் சுற்று ஆட்டத் தில் உலக தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ், தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ் கோவிடம் 2-6, 5-7 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார்.  இதே பிரிவில் உலக தரவரிசையில் 8-ஆம் இடத்தில் உள்ள போலந்தின் ஹுபர்ட் தரவரிசையில் இல்லாத பிரான்ஸ் வீரர் அட்ரியனிடம் 6-7 (5-7), 6-7 (0-7) என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார். மற்றொரு 3-ஆம் சுற்று ஆட்டத்தில் உள்ளூர் நாயகன் டியாபோ (தரவரி சை 12) தரவரிசையில் இல்லாத இத்தாலி வீரர் லோரன்சோவிடம் 3-6, 3-4 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார். ஒரே நாளில் 3 முக்கிய வீரர்கள் தரவரிசையில் இல்லாத வீரர்களிடம் வீழ்ந்து வெளியேறியது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெத்வதேவ் முன்னேற்றம்

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆம்  சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் மெத்வதேவ் விளையாடாமலேயே 4-வது சுற்றுக்கு முன்னேறினார். தர வரிசையில் இல்லாத செர்பிய வீரர்  அலெக்ஸ் காயம் காரணமாக வெளி யேறியதால் மெத்வதேவ் 4-வது சுற்று க்கு தகுதி பெற்றார். இதே போல தர வரிசையில் இல்லாத அமெரிக்க வீரர் கிறிஸ்டோபரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

காலிறுதியில் கிவிட்டோவா

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று  ஆட்டங்களில் ஆடவர் பிரிவை போல பெரியளவு அதிர்ச்சி தோல்வி சம்பவ ங்கள் அரங்கேறவில்லை. பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரைபகி னா, செக்குடியரசின் கிவிடோவா, ரஷ்யாவின் அலெக்ஸ்ட்ரோவா, ருமேனியாவின் கிறிஸ்டியா ஆகியோர் 4-வது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர். 

சாதனை

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரும், துணை கேப்டனுமான ஷதாப் கான் (24) ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கடைசி டி-20 ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி-20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை (84 ஆட்டங்களில்) வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார்.  உலகளவில் டி-20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 7-வது வீரர் ஷதாப் கான் ஆவார். ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), மலிங்கா (இலங்கை), இஷ் சோதி (நியூசிலாந்து),  முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்), ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்), டிம் சவுத்தி (நியூசிலாந்து) ஆகியோர் ஏற்கெனவே 100 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் 6 இடங்களில் உள்ள னர். இந்த சாதனை பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

;