games

img

இந்தியா - ஆஸி., அணிகள் மோதும் பாக்சிங் டே டெஸ்ட்....  நாளை தொடக்கம்...  

மெல்போர்ன் 
 ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (டிச., 26) காலை 5:00 மணிக்கு தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் வாரத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை பெரும்பாலும் "பாக்சிங் டே" டெஸ்ட் போட்டி என அழைக்கப்படுவதால் இந்த டெஸ்ட் போட்டி அதே பெயரில் நடைபெறுகிறது.

தொடரில் முன்னிலை முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இடம் : மெல்போர்ன் மைதானம், மெல்போர்ன்

நேரம் : அதிகாலை 5 மணிக்கு (இந்திய நேரம்) 

;