games

img

ஐபிஎல் 2024

ஹைதராபாத்
எளிமையான வியூகத்தின் மூலம் ஹைதராபாத் அணியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெங்களூரு 

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் அபாயகரமான அணி யாக ஹைதராபாத் உள்ளது. பலமான பேட்டிங் ஆர்டர் கொண்ட அந்த அணி யில் 9 வீரர்கள் வரை பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருப்பதால், ஹைத ராபாத் அணிக்கு பந்துவீச எதிரணி கள் தயங்கி வருகின்றனர். இதில்  முக்கியமான விஷயம் என்னவென் றால் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) - அபிஷேக் சர்மா (இந்தியா)  ஜோடிக்கு பந்து வீசுவது என்றால் எதிரணி வீரர்கள் ஓடி ஒளிகிறார்கள். அந்தளவுக்கு இந்த  ஜோடி மிரட்டலான அதிரடி ஆட்டத்தை  வெளிப்படுத்தி வரும் நிலையில், சமீ பத்தில் நிறைவுபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் தில்லி அணிக்கெதிராக பவர்பிளேவில் புதிய சாதனை படைத்தது. அதாவது 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த டி-20 லீக் அள வில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்தது டிராவிஸ் ஹெட் - அபி ஷேக் சர்மா ஜோடி. இவ்வாறு பல்வேறு அம்சங்களால் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பான பேட்டிங் கொண்ட அபாயகரமான அணியாக ஹைதரா பாத் உள்ள நிலையில், அந்த அணி யின் தனிச்சிறப்பை திட்டம் போட்டு தகர்த்துள்ளது பெங்களூரு அணி.

தொடக்கத்தில் சுழல்
வியாழனன்று நடைபெற்ற 41 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 206 ரன்கள் குவித்தது. வெற்றி இலக்கான 207 ரன்களை ஹைதராபாத் அணி வெறும் 15 ஓவர்களில் விளாசும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூரு அணி தனிவியூகத்துடன் தொடக்க ஓவர்களிலேயே சுழற்பந்து வீச்சை கையிலெடுத்தது. இதனால் தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட்டை இழந்தது பெங்களூரு. அபி ஷேக் சர்மா மட்டும் வழக்கமான அதி ரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த னர். 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பின்பு  ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்த நிலை யில், ஷாபாஸ் அகமது (40), கேப்டன் கம்மின்ஸ் (31)  ஆகியோர் இறுதிக்கட்ட அதிரடியுடன் போராடினாலும் பெங்களூரு அணியின் பந்துவீச்சு வியூகத்தை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடி வில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வியை தழுவியது.

பேட்டிங்கில் தனிக்காட்டு ராஜா வாக வலம் வந்த ஹைதராபாத் அணி யின் வெற்றி நடைக்கு மிகவும் எளிமை யான வியூகம் மூலம் பெங்களூரு முற்றுப் புள்ளி வைத்தது. மேலும் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு  புதிய பார்முக்கு பெங்களூரு அணி  திரும்பியது அந்த அணியின் ரசிகர் களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இன்றைய ஆட்டம்

தில்லி - மும்பை
(ஆட்டம் - 43)
இடம் : தில்லி மைதானம்
நேரம் : மதியம் 3:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (இலவசம்)

லக்னோ - ராஜஸ்தான்
(ஆட்டம் - 44)
இடம் : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மேற்குவங்கம்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா (இலவசம்)

;