games

img

ஐபிஎல் 2022 - பிளே ஆப், இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு  

நடப்பாண்டுக்கான ஐபிஎல் பிளே ஆம் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள இடங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.  

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனேவில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.    

அதன்படி, முதல் பிளே ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் கொல்கத்தாவிலும், இரண்டாவது பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெறும் என தெரிவித்துள்ளார் .    

முதல் தகுதிச்சுற்று  மே 24 அன்றும், எலிமினேட்டர் சுற்று போட்டி மே 25 ஆம் தேதிகளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.    

2 ஆவது தகுதிச்சுற்று மே 27 அன்றும், இறுதிப்போட்டி மே 29 அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.