games

img

விளையாட்டு...

பார்சிலோனா டென்னிஸ்: சின்னர் அவுட்

ஸ்பெயின் நாட்டின் முக்கிய டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆடவருக்கு மட்டும் நடத்தப்படும் பார்சிலோனா டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முன்னணி வீரரும், இத்தாலி நாட்டவருமான சின்னர்  காயம் காரணமாக விலக, அவரை எதிர்த்து போட்டியிட இருந்த மற்றொரு இத்தாலி வீரர் லோரன்சோ அதிர்ஷ்ட வாய்ப்புடன் அரையிறுதிக்கு முன்னேறினார். 

ஐபிஎல் - 2023

இவ்வளவு பிரம்மாண்ட அளவில் பயிற்சியாளர்கள் குழு எதற்கு? 
தேசிய அணி கட்டமைப்புகளை மிஞ்சும் ஐபிஎல்

கிரிக்கெட் உலகில் ஒரு நாட்டின் பயிற்சியாளர் கட்டமைப்பு களில் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் என 4 பயிற்சியாளர்கள் இருப்பார்கள். இதில் தலைமை பயிற்சியாளர் உலகத்தரம் வாய்ந்த முன்னாள் வீரர் அல்லது பயிற்சியில் கூடுதல் அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்ற பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் 2-ஆம் தர சொந்த நாட்டு பயிற்சியாளர்களாக இருப்பார்கள். இதுதான் கிரிக்கெட் விளையாடும் நாட்டின் பயிற்சியாளர் கட்டமைப்பு ஆகும். ஆனால் சாதாரண உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் விளையாட்டின் பயிற்சியாளர் கட்ட மைப்புக்களை பார்த்தால் கிரிக்கெட் உலகமே மிரண்டு விடும். காரணம் வெறும் 2 மாத பயிற்சிக்கு உலகத்தரம் வாய்ந்த முன்னாள் வீரர்கள், பயிற்சி யாளர்கள் ஐபிஎல் தொடருக்கு ஏதோ  சுற்றுலா வந்தது போல உள்ளனர்.  உதா ரணமாக தில்லி அணியை எடுத்துக் கொள்வோம். அந்த அணியின் பயிற்சி யாளர்களை உற்றுநோக்கினாலே எல்லாம் புரியும்: அணி நிர்வாக தலைவர், ஆலோசகர்: சவுரவ் கங்குலி (இந்தியா) தலைமை பயிற்சியாளர்: ரிக்கி பாண்டிங் (ஆஸி.,) துணை பயிற்சியாளர்கள் : அஜித் அகார்கர் (இந்தியா),  பிரவீன் அம்ரே (இந்தியா),  ஷேன் வாட்சன் (ஆஸி.,) பந்துவீச்சு பயிற்சியாளர் :  ஜேம்ஸ் ஹோப்ஸ் (ஆஸி.,) பீல்டிங் பயிற்சியாளர் :  பிஜு ஜார்ஜ் (இந்தியா) வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் : வெயின் லோம்பார்ட் (தென் ஆப்பிரிக்கா), விபேக் ராம கிருஷ்ணா  (இந்தியா). இதுபோக உலகத் தரம் வாய்ந்த பிசியோதெரபிஸ்ட் உள்ளனர்.

நகைச்சுவையில் முடிவடைந்த பயிற்சியாளர் கட்டமைப்பு

தில்லி என்னதான் உலக பிரசித்தி பெற்ற பயிற்சியாளர்களை களமிறக்கி னாலும், நடப்பு ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய தில்லி அணி வெறும் ஒரு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பயிற்சியாளர் கட்டமைப்பு பிரம்மாதமாக இருந்து என்ன பயன் போட்டியின் முடிவுகள் நகைச்சுவையில் முடிவடைந்ததுதான் மிச்சம்.

எல்லாம் பணம்... பட்டத்தின் ஆசை...

இருக்கிற பணத்தை எப்படி செலவு செய்வது என்ற நோக்கில் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் பல ஆயிரம் கோடி செலவு செய்து ஐபிஎல் அணிகளை வாங்குகின்றனர். அவ்வாறு ஐபிஎல் அணிகள் வாங்கும் நபர்களுக்கு பாதி தொகை ஜெர்சி, தனிப்பட்ட விளம்பரம் மூலம் கிடைத்து விடுகிறது. மீதி தொகை கிடைக்காவிட்டாலும் கோப்பை வென்று மரியாதையை பெற வேண்டும் எண்ணத்தில், அதாவது கோப்பையை வெல்ல எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் வீரர்களை ஏலத்தில் எடுத்து, உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களை களமிறக்கின்றன ஐபிஎல் அணிகள். இதன் காரணமாகவே தேசிய கிரிக்கெட் அணிகளை காட்டிலும் ஐபிஎல் தொடரில் பிரம்மாண்ட அளவில் பயிற்சியாளர்கள் பட்டியல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய ஆட்டம்

லக்னோ - குஜராத் (30)
இடம் : ஏக்னா மைதானம், லக்னோ
நேரம் : மதியம் 3:30 மணி

மும்பை - பஞ்சாப் (31)
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி

சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஓடிடி - ஜியோ சினிமா