games

img

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி களை கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பார்டர் - கவாஸ்கர் டிராபி  என்ற பெயரில் நடைபெறஉள்ள இந்த சுற்றுப்பயணத்தின் முதல்  நிகழ்வான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்   ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வியாழனன்று தொடங்குகிறது.

மோதல் உருவாகுமா?

2011 ஒருநாள் உலகக் கோப்பை  காலிறுதி ஆட்டம் (இந்தியா வெற்றி) முதலே இந்தியா - ஆஸ்திரேலியா வீரர்கள் எலியும் - பூனையுமாக உள்ளனர். உலகக்கோப்பை தொடராக இருந்தா லும் சரி, சாதாரண சர்வதேச தொடராக இருந்தாலும் சரி இந்தியா - ஆஸ்திரேலியா வீரர்கள் வம்புக்கு இழுத்தல், வாக்குவாதம் என முட்டு மோதலுடன் தான் விளையாடி வரு கின்றனர்.  இந்நிலையில் நீண்டகால இடைவெளிக்கு பின்னர் ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வுக்கு வரும் நிலையில், இருநாட்டு வீரர்கள் சண்டையுடன் விளையாடு வார்களா? இல்லை சமத்து பிள்ளை யாக விளையாடுவார்களா? என போட்டியின் நகர்வை பொறுத்து தான் தெரியும். ஆனால்  ஸ்லெட்ஜிங் (வார்த்தை மூலம் சீண்டுதல்) முறையை ஆஸ்திரேலிய வீரர்கள் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என்பதால் கண்டிப்பாக மோதல் உருவாக 80% வாய்ப்புள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : காலை 9:30 மணி
இடம் : விதர்பா மைதானம், நாக்பூர்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்

;