games

img

விளையாட்டு...

ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் இந்தியா சாம்பியன்

ஆசிய கிரிக்கெட் வாரியத்தால் மகளிருக்கு நடத்தப்பட்ட ஆசிய கண்ட அளவிலான டி-20  (வளரும் வீராங்கனைகளுக்கான - ஏ கிரேடு) தொட ருக்கான இறுதிப்போட்டிக்கு இந்தியா “ஏ” மற்றும் வங்கதேசம் “ஏ”அணிகள் தகுதி பெற்றன.  புதனன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் (மகளிர் பிரிவில் கடினம்) வங்கதேச அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் தொடக்கம் முதலே திணறிய வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 96 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்தியா “ஏ” அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

விளம்பர வருவாய்க்காக பாரம்பரிய “ஆஷஸ்” பெயரை பின்னுக்குத்தள்ளிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

கிரிக்கெட் உலகில் உலகக்கோப் பைக்கு அடுத்து மிக முக்கிய தொடராக கருதப்படுவது ஆஸ்திரே லியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர்தான். பாரம்பரிய கிளை மேக்ஸ் வரலாறால் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள், எலியும் - பூனையுமாக மோதிக்கொள்வதால் 5 போட்டிகளை கொண்ட ஒவ்வொரு டெஸ்ட் ஆட்டமும் டி-20 போல சுவா ரஸ்யமாக நடைபெறும் என்பதால், ஆஷஸ் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் உலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துள்ளது.  இந்நிலையில், 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொட ரின் 73-வது சீசன் இங்கிலாந்து நாட்டில் வியாழனன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் பல்வேறு தவறுகளால் இங்கிலாந்து அணி சொதப்ப, ஆஸ்தி ரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.  இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆஷஸ் தொடரில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அது யாதெனில் 141 ஆண்டுகளாக வரலாற்று சிறப்பு  பெயர் கொண்ட ஆஷஸ் தொடரை  ஒரே ஆண்டில் விளம்பர வருவாய்க் காக இழிவு படுத்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ஒவ் வ்வொரு ஆஷஸ் தொடரிலும் கோடிக்கணக்கில் ஸ்பான்சர் கிடைப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் ஒரு தொடரில் கூட ஸ்பான்சர் பெயரில் தொடர் நடத்தப்பட்டது கிடையாது.  ஆனால் நடப்பு சீசனில் ஆஷஸ் பெயர் பின்னுக்குத்தள்ளப்பட்டு ஸ்பான்சர் பெயரில்தான் தொடரின் பெயர் அறிவிக்கப்படுகிறது. அதாவது எல்வி (LV) ஆஷஸ் தொடர் என்றுதான் அழைக்கப்படுகிறது. இந்த விவகாரம் கிரிக்கெட் வல்லுனர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

எல்வி (LV) நிறுவனம்?

எல்வி (LV) நிறு வனம் என்பது லிவர்பூல் விக்டோரி யா (Liverpool Victoria) ஆகும். இது பிரிட்டனின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த எல்வி நிறுவனம்தான் நடப்பாண்டு ஆஷஸ் தொடரின் ஸ்பான்சராக உள்ளது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக்
(டிஎன்பிஎல்)
இன்றைய ஆட்டம்
திருநெல்வேலி - சேலம்
இரவு 7:15 மணி
இடம் :  என்பிஆர் மைதானம், நத்தம் (திண்டுக்கல்)

உலகக்கோப்பை தகுதி சுற்று (கிரிக்கெட்)
இன்றைய ஆட்டங்கள்
நெதர்லாந்து - அமெரிக்கா
நேரம் : மதியம் 12:30 மணி
இடம் : தகாசின்கா, ஹராரே
மேற்கு இந்தியத் தீவுகள் - நேபாளம்
நேரம் : மதியம் 12:30 மணி
இடம் : ஸ்போர்ட்ஸ் கிளப், ஹராரே