games

img

ஆசியக் கோப்பை கிரிக்கெட் வங்கதேசம் - இலங்கை இன்று மோதல்

ஆசியக்கோப்பை தொடரின் 15-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று  நடைபெற்று வரும் நிலையில், 5-வது லீக் ஆட்டத்தில் குரூப் பி  பிரிவில் உள்ள இலங்கை அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.  கிரிக்கெட் உலகில் இரு அணிகளுமே மிகவும் பலம் வாய்ந்த அணி களாக இருப்பின் ஆசியக் கோப்பையில் தங்களது முதல் லீக்  ஆட்டத்தில் கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை  தழுவி புள்ளிகளை இழந்தது. இதனால் 5-வது லீக் ஆட்டம் வங்க தேசம், இலங்கை ஆகிய இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான ஆட்டமாகும். தோல்வி காணும் அணி ஏறக்குறைய தொடரிலிருந்து  வெளியேறும் சூழலுக்கு தள்ளப்படும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை - வங்கதேசம்
இடம் : துபாய்
நேரம் : இரவு 7:30 மணி