games

img

விளையாட்டு...

இஸ்ரேலுக்கு எதிரான பேரணி விவகாரம்

இந்தோனேசியாவின் கால்பந்து சங்கத்திற்கான நிதியையும் முடக்கிய பிபா


20 வயதிற்குட்பட்ட இளையோர் உலகக்கோப்பை தொடரின் 23-வது சீசன் வரும் மே மாதம் 20-ஆம்  தேதி தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் நடைபெற விருந்தது. உலக கால்பந்து தொடரை முதன்முதலாக நடத்தப்பட உள்ளதால் இந்தோனேசியா நாடு மிக தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வந்தது.  ஆனால் கடந்த மார்ச் மாதம் 3-ஆம்  வாரத்தில் இஸ்ரேல் நாடு பங்கேற்புக்கு எதிராக கால்பந்து இந்தோனேசியா சம்மேளனத்திலும், நாடு முழுவதும் பல்வேறு பேரணிகள் நடைபெற்றது. குறிப்பாக தலைநகர் ஜகார்த்தாவில் இந்தோனேசிய மற்றும் பாலஸ்தீனக் கொடிகளை அசைத்தும் இஸ்ரேலை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரம்மாண்ட பேரணியை நடத்தினர். மேலும் பாலி யின் ஆளுநர் இஸ்ரேல் அணியின் ஆட்ட த்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், இந்தோனேசியா கால்பந்து சம்மே ளனத்தை முஸ்லீம்கள் பெரும்பான்மை யாக உள்ள நாட்டின் கால்பந்து சங்கம் (பிஎஸ்எஸ்ஐ) என  அறிவித்தார்.  இந்த விவகாரம் புகாராக சர்வதேச  கால்பந்து சம்மேளனத்திற்கு (பிபா) செல்ல, மார்ச் 29-ஆம் தேதி அவசரக் கூட்டத்தை கூட்டிய பிபா இந்தோ னேசியாவில் நடைபெற உள்ள 23-வது சீசன் கால்பந்து தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது.  இந்நிலையில், இந்தோனே சியாவின் கால்பந்து கூட்டமைப் பிற்காக ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதி யையும் ரத்து செய்வதாக பிபா அறி வித்துள்ளது. உலகக்கோப்பை ரத்து, மேம்பாட்டு நிதி முடக்கம் ஆகியவை இந்தோனேசியா கால்பந்து உலகில்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள் ளது. நாட்டின் ஒவ்வொரு இடங்களி லும் போராட்டம் நடத்த ரசிகர்கள் ஆய த்தமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்து இரண்டு தொடர்கள் ரத்து

அடுத்தடுத்து இரண்டு தொடர்கள் ரத்து 19-வது சீசன் ஆடவர் இளையோர் (யு-17) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி தென் அமெரிக்க நாடான பெருவில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  பெரு கால்பந்து சம்மேளனம் அடிப்படை கட்டமைப்பு வசதியை கூட முடிக்காமல் மந்தமான அளவில் ஏற்பாடுகளை செய்து வந்ததால், சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) அதிகாரிகள் ஆய்வின் பொழுது கண்டறிந்து, யு-17 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் உரிமத்தை ரத்து செய்தனர். இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இந்தோனேசியாவில் நடைபெறவிருந்த 23-வது சீசன் யு- 20  உலகக்கோப்பையையும் ரத்து செய்வ தாக பிபா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து எங்கே?

இந்தோனேசியாவில் நடை பெறவிருந்த இளையோர் உலகக்கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பெரு,  அர்ஜெண்டினா மற்றும் கத்தார் ஆகியவை போட்டியை நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளது. எனினும் அர்ஜெ ண்டினா நாட்டிற்கு கூடுதல் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் - 2023

2-வது வெற்றியை ருசிக்குமா சென்னை அணி?
மும்பையுடன் இன்று மோதல்

ஐபிஎல் உலகில் எலியும், பூனையுமாக இருக்கும் அணிகளான சென்னை - மும்பை அணிகள் 12-வது லீக் ஆட்டத்தில் முதல் முறையாக (சீசனில்) மோதுகின்றன. முதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் மும்பை அணியும், 2-வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் சென்னை அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டங்கள்
ராஜஸ்தான் - தில்லி
நேரம் : மதியம் 3:30 அணி
இடம் : கவுகாத்தி, அசாம்
சென்னை - மும்பை
நேரம் : இரவு 7:30 அணி
இடம் : வான்காடே மைதானம், மும்பை
சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா