games

img

ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் விலகல்  

ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து பிரபல இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியதால் அவருக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளார்.  

ஐபிஎல் 15ஆவது சீசன் மார்ச் 26 முதல் மே 29 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கிவிட்டன.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரராக ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.50 கோடிக்கு எடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், பயோ பபுள் விதியால் ஏற்பட்ட சோர்வால் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

இதையடுத்து அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதிலாக ஏலத்தில் யாரும் தேர்வு செய்யாத ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்சை கொல்கத்தா அணி தேர்வு செய்துள்ளது.  35 வயதான ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் பிஞ்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வென்றது.

தற்போது 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவருக்கு இது 11ஆவது ஐபிஎல் தொடர் ஆகும்.  

இதுவரை ஆரோன் பிஞ்ச் ஐபிஎல் போட்டிகளில் 8 அணிக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.