games

img

அடிலெய்டு  டெஸ்ட்....   இந்திய அணி அசத்தல் பந்துவீச்சு....   191 ரன்களில் சுருண்ட ஆஸி.., 

அடிலெய்டு 
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட  இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. பகலிரவு டெஸ்ட் ஆட்டமான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் உயிரோட்டமாக இருந்ததால் தொடக்க ஓவர் முதலே பந்துவீச்சாளர்களின் கை ஓங்கியது. வேகப்பந்துவீச்சு மட்டுமல்ல சுழற் பந்துவீச்சும் எகிறியது.

இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறினர்.  இருப்பினும் கேப்டன் கோலி (74), புஜாரா (43), ரஹானே (42) ஆகியோர் ஓரளவு சமாளிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 93.1 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் பந்துவீச்சை கணிக்க முடியாமல் திணறியது.  அஸ்வின் ஒருபக்கம் தாக்குதல் நடத்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களில் ஆட்டமிழந்தது. கேப்டன் பெயின் (73),  லபுஸ்சாக்னே (47)  மட்டும் ஓரளவு ரன் குவித்து அணியின் கவுரவத்தை காப்பாற்றினர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

தொடர்ந்து தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களுக்கு  9 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்தது.62 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி 3-ஆம் நாளில் ரன்  குவிக்கும் விதத்தை பொறுத்து இந்த டெஸ்ட் போட்டி யாருக்கு வெற்றி என கணிக்க முடியும். 

3-ஆம் நாள் ஆட்டம் நாளை காலை 9:30 மணிக்கு தொடங்கும்.. 

சேனல் சோனி டென் .... 

;