games

img

ஐசிசியின் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பிடித்த 3 இந்திய வீரர்கள்  

2021 ஐசிசியின் ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆணியில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.  

ஒருநாள், டி20 அணிகளில் இந்தியர்கள் யாரும் இடம்பெறாத நிலையில் ஐசிசி டெஸ்ட் அணியில் 3 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 2021 ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான ஆடவர் அணியில் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  

முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற புள்ளி கணக்கில் வென்றதால் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பெற்றது. நியூசிலாந்து அணி 2வது இடம் பிடித்து உள்ளது. இந்திய அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.  

ஐசிசி டெஸ்ட் அணியின் வீரர்கள்:  

கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), அஸ்வின்(சுழற்பந்து வீச்சாளர்), ரோகித் சர்மா, கருணரத்னே, லாபஸ்சேங், ஜோ ரூட், பாவத் அலம், ஜேமிசன், ஹசன் அலி, ஷாகின் அபிரிடி.