games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 20 முதல்  டிசம்பர் 18 வரை 

இன்றைய ஆட்டங்கள்

அர்ஜெண்டினா - சவூதி அரேபியா
நேரம் : மதியம் 
3:30 மணி
இடம் : லுசைல் மைதானம்

குரூப் “சி”

அசுர பலத்தில் உள்ள அர்ஜெண்டினா அணியை கத்துக்குட்டி சவூதி அரேபியா அணி சமாளிப்பது மிகவும் கடினம் என்பதால் அர்ஜெண்டினா அணி இந்த ஆட்டத்தில் எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பாட்டத்திற்கு பெயர் பெற்ற சவூதி அரேபியா போட்டியை டிரா செய்யவும் வாய்ப்புண்டு.

டென்மார்க் - துனிசியா
நேரம் : மாலை
6:30 மணி
இடம் :  எஜூகேசன் சிட்டி மைதானம்

குரூப் “டி”

அனுபவத்தில் சிறந்த டென்மார்க் அணி சற்று சூப்பர் பார்மில் உள்ளது. இது அந்த அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும். அனைத்து பிரிவு களிலும் சிறப்பாக விளையாடக்கூடிய துனிசி யா அணியின் உறுதியான பார்ம்  கணிக்க முடியாதது என்றாலும் போட்டியை கடைசி நேரத்தில் மாற்றுவதில் வல்லமை படைத்த வை என்பதால் இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என திடமாகக் கூறமுடியாது.

மெக்ஸிகோ - போலந்து
நேரம் : இரவு 
9:30 மணி
இடம் : 974 மைதானம்

குரூப் “சி”

தடுப்பாட்டத்தில் உலக புகழ் வாய்ந்த மெக்ஸிகோ  அணி ஒரு கோல் அடித்துவிட்டால் பந்தை தனது காலுக்குள் கட்டி போடும் அளவிற்கு சிறப்புடை யது. அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக போலந்து இருந்தாலும், மெக்ஸிகோவை கவனமாக சமாளி த்தால் மட்டுமே வெற்றி பெறலாம். சற்று அசந்தால் மெக்ஸிகோவின் போட்டியை முற்றிலும் மாற்றி விடும். பலத்தில் இரு அணிகளும் சரிசமமாக இருப்ப தால் இந்த ஆட்டம் டிரா ஆகலாம்.

பிரான்ஸ் -  ஆஸ்திரேலியா
நேரம் : நள்ளிரவு 12:30 மணி (செவ்வாயன்று அதிகாலை)
இடம் : அல் ஜனுப் மைதானம்

குரூப் “டி”

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி கடந்த சீசனைக் காட்டிலும், 22-வது சீசனில் மிரட்டல் பலத்துடன் களமிறங்குகிறது. அதிரடி தாக்குதல் வகை ஆட்டத்தை கையா ளும் சிறப்புடைய பிரான்ஸ் அணியை, தடுப்பாட்ட பலத்தை மட்டும் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி சமாளிப்பது சிரமம் ஆகும். இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.

விதிகளை மீறி பெண்களை கண்காணிக்கும் கத்தார்...

உலக தொடரை நடத்தினாலும் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ள வெளிநாட்டு கால்பந்து பெண் ரசிகர்களுக்கு அந்நாட்டு அரசு இறையாண்மை தொடர்பாக எவ்வித சமரசம் செய்யவில்லை. உடை மற்றும் திருமணமாகாத பெண்கள் பாலியல் உறவு, ஓரினச்சேர்க்கை என பல முக்கியமான விஷயங்களில் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை வெளிநாட்டு பெண்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை அறிய கால்பந்து மைதானத்தில் அமர்ந்துள்ள பெண்களின் இருக்கையை பெரிதாக பார்க்கவும், பார்வையாளரைத் தெளிவாகப் பார்க்கவும் உயர் தெளிவுத்திறன் கொண்ட சிறப்பு கேமராக்களை வைத்து தனி மனித மீறலை மீறியிருக்கிறது கத்தார் அரசு.