games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 20 முதல் 
டிசம்பர் 18 வரை

குரூப் “இ”

ஜப்பான் - கோஸ்டாரிகா

நேரம் : மதியம் 3:30 மணி / இடம் : அஹமத் பின்

இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாகும். ஜப்பான் அணி தனது முதல் ஆட்டத்தில் பலமான ஜெர்மனி அணியை வீழ்த்தியது. கோஸ்டாரிகா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியிடம் வீழ்ந்தது. 
 

குரூப் “எப்”

பெல்ஜியம் - மொரோக்கோ

நேரம் : மாலை 6:30 மணி / இடம் : அல் துமமா

இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாகும். பெல்ஜியம் அணி முதல் ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தியது. மொரோக்கோ அணி தனது முதல் ஆட்டத்தில் பலமான குரோஷியா அணியை டிரா செய்தது.

குரூப் “எப்”

குரோஷியா - கனடா

நேரம் : இரவு 9:30 மணி / இடம் : கலீபா

இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாகும். கனடா தனது முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் அணியிடம் வீழ்ந்தது. குரோஷியா தனது முதல் ஆட்டத்தில் மொரோக்கோ அணியை டிரா செய்தது.
 

குரூப் இ”

ஸ்பெயின் - ஜெர்மனி

நேரம் : நள்ளிரவு 12:30 மணி (திங்களன்று அதிகாலை) / இடம் : அல் பாயித் 
 

இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாகும். ஸ்பெயின் அணி முதல் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது. ஜெர்மனி முதல் ஆட்டத்தில் ஜப்பானிடம் வீழ்ந்தது.

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.

ஸ்பெயினை சமாளிக்குமா ஜெர்மனி?

கடந்த உலகக்கோப்பை போன்று பார்ம் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜெர்மனி அணி தனது முதல் ஆட்டத்தில் சிறிய அணியான ஜப்பானிடம் வீழ்ந்து கால்பந்து உலகில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. ஜெர்மனி அணி  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வேண்டு மானால் அடுத்து வரும் 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெல்ல வேண்டும். சனியன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் மிகவும் பலமான ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது ஜெர்மனி. அடுத்து டிசம்பர் 2-ஆம் தேதி கோஸ்டாரிகாவை எதிர்கொள்கிறது.  தடுப்பாட்டத்தில் பலமான கோஸ்டாரி காவை வீழ்த்துவது மிக எளிதான விஷயம் என்றாலும், அனைத்து பிரிவுகளிலும் முரட்டு பலத்தில் உள்ள ஸ்பெயின் அணியை வீழ்த்த நினைப்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. காரணம் ஸ்பெயின் தனது முதல் ஆட்டத்தில்  கோஸ்டாரிகாவை 7 கோல்கள் வித்தியா சத்தில் பந்தாடி, முதல் ஆட்டத்திலேயே தனது மிரட்டலான பார்மை வெளிக்கா ட்டிய சந்தோஷத்தில் உள்ளது ஸ்பெயின். இப்படி பல்வேறு இடியாப்ப சிக்கல் உள்ள நிலையில், ஜெர்மனி எப்படி நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

;