games

img

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உக்ரைன் தீவிர முயற்சி

2030-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏலம் தொடர்பான வேலைகள் மிகவும் சுவா ரஸ்யமாக நடைபெற்று வரும் நிலை யில், உக்ரைன் நாடு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.  முக்கியமாக மற்ற நாடுகளை போல் தனியாக தொடரை நடத்த உக்ரைன்  பிபாவிடம் கேட்கவில்லை. ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து உலகக் கோப்பையை நடத்த உள்ளதாகவும், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துவதற் கான கூட்டு முயற்சியில் களமிறங்கி யுள்ளதாக முன்கூட்டியே தகவலும் வெளியிட்டுள்ளது. விளையாட்டு உலகிற்கு அப்பால் மக்களை இணைக்கும் உக்ரைன் நாட்டின் இந்த முயற்சிக்கு ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகள் ஒத்துழைக்க முன்வந்துள்ள நிலையில், 2030-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை உக்ரைன்-ஸ்பெயின்-போர்ச்சுக்கல் நாடுகள் நடத்த ஏதுவான சூழல் உரு வாகியுள்ளது. மேலும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாடு அதனை கண்டுகொள்ளாமல் விளை யாட்டு மூலம் ஐரோப்பிய நாடுகளை நட்பு நாடுகளாக இணைக்கும் திட்டத்தை பிபாவும் வரவேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் பிபாவின் கொள்கை முடிவு குறித்து திடமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;