games

img

மின்னல் வேகத்தில் பறக்கும் “அல் ரிஹ்லா”

கத்தார் உலகக்கோப்பை தொடரில்  “அல் ரிஹ்லா” என்ற பந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற விளையாட்டு உபகரண தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் (ADIDAS) தயாரித்துள்ள இந்த “அல் ரிஹ்லா” பந்து கடந்த கால  பந்துகளை போல அல்லாமல் கூடுதல் தரத்துடன் உள்ளது. உதைப்பதற்கு, பாஸ் செய்வதற்கு, ஷாட் செய்வதற்கு என அனைத்திற்கும் பக்க பலமாக உள்ளது. ஆனால் ஆதிரடி ஷாட் செய்வதற்கு “அல்  ரிஹ்லா”  முதன்மையாக உள்ளது. கூடுதல் வேகத்தில்  அல் ரிஹ்லாவை  உதைத்தால் வித்தியாசமான சத்தத்துடன் மின்னல் வேகத்தில் பறக்கிறது.  

“அல் ரிஹ்லா” - அரபு மொழியில் பயணம்

எல்லாம் பாகிஸ்தானின் கைவண்ணம்...

“அல் ரிஹ்லா” பந்து தயாரானது வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரத்தில் தான். இந்த சியால்கோட் மார்க்கத்தில் தான் உலகிற்கு தேவையான 70% கால்பந்துகள் சப்ளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

;