games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின்  22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இனி கத்தார் மைதானங்களில் அனல் காற்றுதான் இன்று முதல் நாக் அவுட் சுற்றுகள் தொடக்கம்

லீக் சுற்று ஆட்டங்கள் சனியன்று அதிகாலை நிறைவு பெற்ற நிலையில், சனியன்று இரவே நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது. இனி டிரா என்ற பேச்சுக்கு இடமில்லை. 90 நிமிடம் வரை கோலடிக்காமல் சமநிலையில் இருந்தால், கூடுதலாக 30 நிமிடம் (இரண்டு  பாதியாக 15x15) கொடுக்கப்படும். கூடுதல் நிமிடங்களும் சமநிலையில் முடிவடைந்தால் நேரடியாக பெனால்டி சூட் அவுட் தான். கத்தார் உலகக்கோப்பை தொடரில் இனி வெற்றி, தோல்வி என்று மட்டுமே ஆட்டங்கள் நிறைவு பெறும் என்பதால், ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாக் அவுட் ஆட்டங்கள்

நெதர்லாந்து - அமெரிக்கா

நேரம் : இரவு 8:30 மணி
இடம் : கலீபா

அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா

நேரம் : நள்ளிரவு 12:30 மணி
(ஞாயிறன்று அதிகாலை) 
இடம் : அஹமத் பின் அலி

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்

குரூப் சுற்று... ஷார்ட்ஸ்...

 போட்டியை நடத்தும் கத்தார், கனடா ஆகிய அணிகள் குரூப் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் தோல்விகண்டு வெளியேறியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் விளையாடிய கத்தார் முதல் அணியாக வெளி யேறியது என்பதுதான். (கத்தார் அடித்த கோல் 1, வாங்கியது 7) v கருப்புக் குதிரைகள் என வர்ணிக்கப்பட்டு டென்மார்க் வெற்றியை ருசிக்காமல் வெளியேறி யுள்ளது.

 தனது முதல் போட்டியில் பலம்வாய்ந்த சாம்பியன் அணியான அர்ஜெண்டினாவை வீழ்த்தி அதிர்ச்சி யளித்தாலும், முதல் சுற்றுடன் வெளியேறியது சவூதி அரேபியா.

 முன்னாள் உலகச் சாம்பியன்களான ஜெர்மனி, ஸ்பெயின் அணிகளை வீழ்த்தி குழுச்சாம்பிய னாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நான்கு முறை ஆசிய சாம்பியனான ஜப்பான்.

 நான்கு முறை உலகச்சாம்பியனான ஜெர்மனி தொடர்ந்து 2-வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

 பலம் பொருந்திய ஈகுவடாரை வீழ்த்தி செனகல் 20 ஆண்டுகளுக்கு பின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.

 ஒரு போட்டியில் அதிக கோல்கள் அடித்த அணி யாக ஸ்பெயின் (கோஸ்டாரிகாவிற்கு எதிராக 7) உள்ளது. (மாலை 5 மணி நிலவரம்)

 

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

குரூப் “ஏ” 
நெதர்லாந்து, செனகல்
குரூப் “பி”
இங்கிலாந்து, அமெரிக்கா
குரூப்“சி”
அர்ஜெண்டினா, போலந்து 
குரூப்“டி”
பிரான்ஸ், ஆஸ்திரேலியா
குரூப் “இ”
ஜப்பான், ஸ்பெயின் 
குரூப்“எப்”
மொரோக்கோ, குரோஷியா
குரூப் “ஜி”
பிரேசில்
குரூப் “எச்”
போர்ச்சுக்கல்
மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 14 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

 

4 முறை சாம்பியன் ஜெர்மனி அவுட்

கால்பந்து உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற அணியும், 4 முறை சாம்பியன் அணியான ஜெர்மனி கடந்த முறை போலவே சொதப்பலான ஆட்டத்தால் 22-வது சீசனில் குரூப் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தது. குரூப் “இ” பிரிவில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி முதல் ஆட்டத்தில் இளம் அணியான ஜப்பானிடம் 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்ந்தது. கட்டாய வெற்றி சூழ்நிலையில் தனது 2-வது ஆட்டத்தில் பலமான ஸ்பெயின் அணியிடம் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற கோஸ்டாரிகா அணியிடம் அதிக கோல் வித்தியாசத்துடன் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு சிக்கலுடன், ஜப்பான் அணியை ஸ்பெயின் அணி வீழ்த்த வேண்டும் என்ற மற்றொரு சிக்கலுடன் வெள்ளியன்று அதிகாலை  தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடி யது ஜெர்மனி. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி மிக அதிரடியாக விளையாடி 4-2 என்ற  கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை புரட்டியெடுத்தது.   கடைசி லீக் ஆட்ட வெற்றியால் ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வியை தழுவ ஜெர்மனியின் நாக் அவுட்  சுற்று  கானல் நீரைப் போன்று காணாமல் போனது. கடந்த சீசனில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பெல்ஜியம் அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெற்றியின் ரகசியம் - 6

வெற்றியின் ரகசியம் - 6

  1.      100 மீ ஓட்டப்பந்தயம் போல பந்திற்காக பறப்பது. சில சமயம் மொரோக்கோ வீரர்கள் பந்துடனும் பறக்கிறார்கள்
  2.  பலம் வாய்ந்த அணியோ பலம் குறைந்த அணியோ யாராக இருந்தால் என்ன? மோதிதான் பார்ப்போமே என்று முரட்டுத் தனமாக விளையாடுவது m பிரேசில் போல முன்களம், பின்களம் என இரண்டிலும் தாக்குதல் பாணி
  3.  முக்கியமாக அணி வீரர்கள் பயிற்சியாளரின் சைகை மொழிகளை அப்படியே உள்வாங்கி கும்கி யானைகள் போல தாக்குதல் நடத்துவது (கும்கி யானைகள் மாவூத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப வேலைகள், உணவு அருந்துதல், காட்டு யானைகளை தாக்கும்) m அணி வீரர்கள் ஒற்றுமையாய் இருப்பது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆகும்.
  4.  இப்படி பல விஷயங்களுடன் மொரோக்கோ அணி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் சக்தி வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது.

 

கத்தாரை கதி கலங்க வைக்கும் மொரோக்கோ

உலக நாடுகளின் பட்டியலில் மொரோக்கோ என்ற சொல் அதிகம் உச்சரிக்கப்படாது. புரியும்படி சொன்னால் மொரோக்கோ என்ற நாடு  இருப்பது சிலருக்கு தெரியாது. மொரோக்கோ நாடு பற்றி கேள்வி கேட்டால் ஆப்பிரிக்கா கண்டத்தில் எங்கேயோ இருக்கிறது என்று ஒரு சிலர்  பதில் தரலாம். ஆனால் உலகின் முதன்மை யான விளையாட்டுத் திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசனில் வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ டாப் டிரெண்டிங்கில் உள்ளது. காரணம் குரூப் “எப்” பிரிவில் கடந்த உலகக்கோப்பையில் 2-வது இடம்  பிடித்த குரோசியா (டிரா), மூன்றாம் இடம்  பிடித்த பெல்ஜியம் (வெற்றி) அணிகளை  ஒரு புரட்டு புரட்டியெடுத்தது மட்டுமல்லா மல், இளம் அணியான கனடாவை பந்தாடியது. இவ்வாறு  தோல்வியை சந்திக்காமல் குரூப் சாம்பியன் அந்த ஸ்தில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி கத்தார் உலகக்கோப்பை தொடரை கதி கலங்க வைத்துள்ளது மொரோக்கோ.


 

 

 

 

 

;