இதுவரை வீரர்கள் விபரம் அறிவித்த நாடுகள்
22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 21-ஆம்தேதி கத்தாரில் தொடங்குகிறது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இதுவரை 27 அணிகளின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான், கானா, துனிசியா, மெக்சிகோ, ஈகுவடார் ஆகிய நாடுகள் மட்டும் இன்னும் வீரர்களின் விபரத்தை அறிவிக்கவில்லை. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கேமரூன், கனடா, கோஸ்டா ரிகா, குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மொரோக்கோ, நெதர்லாந்து, பின்லாந்து, போர்ச்சுக்கல், கத்தார், சவூதி அரேபியா, செனகல், செர்பியா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, உருகுவே, வேல்ஸ் ஆகிய 27 நாடுகள் வீரர்கள் விபரத்தை அறிவித்துள்ளது.
கத்தாரில் 5 நாடுகள்...
உலகக்கோப்பை தொடருக்காக ஜப்பான், துனீசியா, தென்கொரியா, சுவிட்சர்லாந்து, ஈரான் ஆகிய 5 நாடுகள் மட்டுமே கத்தாருக்கு வந்துள்ளன. டென்மார்க், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஈகுவடார் ஆகிய நாடுகள் 15-ஆம் தேதியும், செனகல், வேல்ஸ், பிரான்ஸ் நாடுகள் 16-ஆம் தேதியும், ஜெர்மனி 17-ஆம் தேதியும், பெல்ஜியம், ஸ்பெயின் 18-ஆம் தேதியும், போர்ச்சுக்கல், உருகுவே ஆகிய நாடுகள் 19-ஆம் தேதியும் கத்தாரில் தரையிறங்க உள்ளன. உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முந்தைய நாள் (நவ., 20) பிரேசில் அணி கத்தாருக்கு வந்து சேரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் முறையாக 32 நாடுகளில்...
உலகைச் சுற்றிவிட்டு கத்தாரை வந்தடைந்த கால்பந்து தங்கக்கோப்பைக்கு தலைநகர் தோஹாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தங்கக்கோப்பையின் உலகப்பயணம் துபாயிலிருந்து துவங்கிய நிலையில், 6 மாத இடைவெளி யில் மொத்தம் 54 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தங்கக்கோப்பை முதல் முறையாக போட்டி களில் பங்கேற்கும் 32 நாடுகளுக்கும் சென்று வந் துள்ளது. உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தங்கக்கோப்பை சுற்றுப்பயணம் நடைமுறையில் உள்ளது.