games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 20 முதல் 
டிசம்பர் 18 வரை

இன்றைய ஆட்டங்கள்

இன்று “ஸ்டார் டே”

உலகக்கோப்பை தொடரில் வியாழனன்று 4 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் 3 ஆட்டங்களில் கால்பந்து உலகின்  நட்சத்திர அணிகளான பிரேசில், போர்ச்சுக்கல், உருகுவே ஆகிய அணிகள் பங்கேற்கிறது.

குரூப் “ஜி”

சுவிட்சர்லாந்து - கேமரூன்

நேரம்: மதியம் 3:30 மணி; இடம்: அல் ஜனுவப்


குரூப் “ஹெஜ்”

உருகுவே - தென் கொரியா

நேரம்: மாலை 6:30 மணி; இடம்: எஜூகேசன் சிட்டி

குரூப் “ஹெஜ்”

போர்ச்சுக்கல்  - கானா

நேரம்: இரவு 9:30 மணி; இடம்: 974 மைதானம்

குரூப் “ஜி”

பிரேசில் - செர்பியா

நேரம் : நள்ளிரவு 12:30 மணி  (வெள்ளியன்று அதிகாலை); இடம் : லுஸைல் 

“பீப்பி”க்கு கட்டுப்பாடு விதிக்காத கத்தார்

உலக தொடரை நடத்தும் கத்தார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆடைக்கட்டுப்பாடு, மதுபானம், ஓரினசேர்க்கை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் ஒன்றை மட்டும் மறந்துவிட்டது. ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்க கண்டத்தில் வந்துள்ள ரசிகர்கள் வாகனங்களின் ஹார்ன் வகை பீப்பிகளை வைத்து மைதானத்தை நடுங்க வைத்து வருகின்றனர்.குறிப்பாக ஆப்பிரிக்கர்கள் கொண்டு வரும் பீப்பிகள் அதிக டெசிபல் கொண்டது ஆகும். இதனால் மைதானத்தில் அமைதியின்மை, வயதானவர்கள் பதற்றம் அடைதல், நடுவர்களின் விசில் சத்தத்தை கவனிக்கும் திறன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் பிற தடைகளை விட “பீப்பி”க்கு தடைக்கு விதிப்பது மிக  முக்கியமானதாக உள்ளது என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.

பிட்ச் சரியில்லை... வீரர்களுக்கு மோசமான அளவில் ஏற்படும் காயம்....

பாலைவன பூமியான கத்தாரில் பசுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது. அங்கு வெயில் மிகவும் அதிகம். கிட்டத்தட்ட  45 டிகிரி வெயில் புரட்டியெடுக்கும் என்பதால் மரங்கள் கூட வளருவது சிரமமான விஷயம்தான். இத்தகைய சூழ்நிலையில் பிரம்மாண்ட செலவுடன் 8 மைதானங்களில் தற்காலிமாக புல்தரை மைதானங்கள் அமைக்கப்பட்டது. பொதுவாக கிரிக்கெட்  விளையாட்டைப் போன்று கால்பந்து மைதானத்திற்கு பிட்ச் அனுபவம் வேண்டும். ஆனால் போதியளவு அனுபவம் மற்றும் ஆட்டங்கள் இல்லாமல் ஆடுகளம் அமைக்கப்பட்டதால் பிட்ச் பகுதி கடுமையாக வழுக்கிறது. இதனால் வீரர்களுக்கு காயம் அதிகம் ஏற்படுகிறது.