games

img

உலகக்கோப்பை கால்பந்து 2022

இல்லாமல் கிளப் அணி இல்லை... இருந்தும் தேசிய அணி உலகக்கோப்பையில் இல்லை...

இவர்கள்

கடந்த காலங்களை விட தற்போதைய நவீன கால்பந்து உலகம் மிகவும் மாறுபட்டு விட்டது. முன்னர் நாடுகளின் பெயரால் கால்பந்து  அணியின் பெருமை, சிறப்பு எல்லாம் இருக்கும். நாட்டின் பெருமையால் தான் வீரர்களின் சிறப்பு செய்திகளாக மாறும். ஆனால் தற்போது தனி வீரர்களின் பெயரில் ஒரு கால்பந்து நாட்டின் சிறப்பு பேசப்பட்டு வருகிறது. மெஸ்ஸி என்றால் அர்ஜெண்டினா, நெய்மார் என்றால் பிரேசில், ரொனால்டோ என்றால் போர்ச்சுக்கல், மாப்பே என்றால் பிரான்ஸ் என இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. கால்பந்து உலகில் இப்படி ஒரு நிலைமை உருவானதற்கு காரணம் ஐரோப்பா கிளப் ஆட்டங்கள் தான்.  மெஸ்ஸி, நெய்மார், ரொனால்டோ ஆகியோர் நாட்டிற்காக பெரியளவில் சாதிக்கவில்லை என்றா லும் ஐரோப்பா கிளப் தொடர்களால்தான் கால்பந்து  உலகில் தனிக்காட்டு ராஜாவாக உள்ளனர். மேற்குறி ப்பிட்ட அனைவரும் தங்கள் தேசியத்திற்காக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கும் நிலையில், மெஸ்ஸி, நெய்மார், ரொனால்டோ போல ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளில் பிரபலமாக உள்ள முகமது சலா (லிவர்பூல்), எர்லிங் ஹாலண்ந்த் (மான்செஸ்டர் சிட்டி), விக்டர் ஓசிம்ஹென் (நபோலி)  ஆகிய வீரர்கள் உலகக்கோப்பையை இழந்துள்ள னர். காரணம் தாங்கள் வலுவாக இருந்தாலும் தங்கள் நாட்டு அணி  தகுதிச்சுற்றில் வெளியேறியதால் உல கக்கோப்பையில் விளையாட முடியாத சூழல்ஏற்பட்டுள்ளது. 

1. முகமது சலா (எகிப்து)

இங்கிலாந்து கிளப் அணியான லிவர்பூல் அணிக்காக  விளையாடி வரும், அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சலாவின் எகிப்து அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. 21-வது சீசனில் (2018 - ரஷ்யா) எகிப்து அணி பங்கேற்றது. இதற்கு முன் 1934, 1990 ஆகிய உலகக்கோப்பை சீசன்களில் ஆப்பிரிக்க நாடான எகிப்து விளையாடியுள்ளது.

2. எர்லிங் ஹாலண்ந்த் (நார்வே)

இங்கிலாந்து கிளப் அணியான மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வரும், கால்பந்து உலகின் பிரபல முரட்டு குணமிக்க நட்சத்திர வீரரான எர்லிங்  ஹாலண்ந்தின் நார்வே அணியும் 22-வது சீசன் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. நார்வே நாடு  1938, 1994, 1998 ஆகிய உலகக்கோப்பை சீசன்களில் பங்கேற்று ள்ளது. எர்லிங் ஹாலண்ந்த் நார்வே தேசியத்தில் இருந்தா லும், அவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.விக்டர் ஓசிம்ஹென் (நைஜீரியா)

இத்தாலி கிளப் அணியான நபோலி அணியின் நட்சத்திர வீரர் விக்டர் ஓசிம்ஹெனின் தேசிய அணியான நைஜீரியா, கத்தார் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. 6 முறை (1994, 1998, 2002, 2010, 2014, 2018)  உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள ஆப்பிரிக்க நாடான நைஜீரியா இம்முறை தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.